"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "
நாள் - 89
டாஸ்மாக் விபரீதம்: மகளின் தோழியின் வாயில் மது ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது....!சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 12 வயது சிறுமியை மது குடிக்க வைத்து பலாத்காரம் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆத்தூர் அருகே துலுக்கனூர் பகுதியை சேர்ந்த சங்கர். என்பவரது மகள் ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஹேமாவும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வீரபத்திரனின் மகள் சித்ராவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தோழிகள் ஆவர்.
நேற்று வீரபத்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீடு பூட்டியிருந்தது. அப்போது வீரபத்திரன், ஹேமாவிடம் சித்ராவின் அம்மாவிடம் சாவியை வாங்கிக்கொண்டு வரலாம் என்று கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
முல்லை வாடி என்ற பகுதியில் மது வாங்கிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற வீரபத்திரன் மாணவியை மது குடிக்க சொல்லி தாக்கியுள்ளார்.
மேலும் மாணவியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக வீரபத்திரன் மிரட்டியுள்ளார். மேலும், காமுகன் வீரபத்திரன், இனி இதே போல் அடிக்கடி வரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.
பின்னர் மாணவி ஹேமாவை மீண்டும் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்து துலக்கனூர் பகுதியில் உள்ள பள்ளி அருகே இறக்கி விட்டு சென்று விட்டார்.
வீட்டிற்கு வந்த சிறுமி ஹேமா தனது தாயிடம் நடந்த விபரங்களை சொல்லி கதறி அழுதார். மேலும் உடல் முழுவதும் ஹேமாவிற்கு காயம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டு சென்று வீரபத்திரனை அடித்து உதைத்து இழுத்து கொண்டு வந்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இது தொடர்பாக சிறுமி ஹேமா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து வீரபத்திரனை கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பார்த்தீர்களா நண்பர்களே, மது எப்படியெல்லாம் மனிதர்களை சீரழிக்கிறது. உறவுகளை எப்படியெல்லாம் சீரழிக்கிறது..
இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் தொடர்கதையாகவே நடந்து வருகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி. மதுவை ஒழிப்பதுதான். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் சரியான வழி...
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================