"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!"
நாள் - 63
தமிழகத்தில்
மதுவிலக்கை அமல்படுத்த தயார்.....!
சட்டப்பேரவையில்
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு....!!
தமிழக பட்ஜெட்
(2014-15) குறித்த பொது விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.
அதில் புதிய
தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசியபோது, மதுவினால் இளைஞர்கள்
பலர் வாழ்க்கையை இழந்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்தார்.
எனவே, தமிழகத்தில்
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அவர் அரசை கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில்
அளித்து பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மது விற்பனையை அரசு ஊக்கப்படுத்தவில்லை
என்றார்.
மது விற்பனை
வருமானம் அரசு கஜானாவுக்கு வராமல் சமூக விரோதிகளின் கைகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவே,
மது விற்பனையை அரசு நடத்துகிறாது என அமைச்சர் விளக்கம் அளித்தார்.
பூரண மதுவிலக்குதான்
அரசின் கொள்கையாக இருந்தாலும், பக்கத்து மாநிலங்களையும் கவனிக்க வேண்டும் என அவர் கூறினார்.
தமிழகத்தைச்
சுற்றியுள்ள புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்தினால்,
தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த தயார் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
மதுவிலக்கை
பக்கத்து மாநிலங்களில் அமல்படுத்தாத நிலையில், நடைமுறை சாத்தியக் கூறுகளையும் பார்க்க
வேண்டும் என்றும் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்தார்.
ஆக, தமிழகத்தில்
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமானால், பக்கத்து மாநிலங்களிலும் மதுவிலக்கை அமல்படுத்த
வேண்டும் என்கிறார் அமைச்சர்.
இந்த நேரத்தில்
சிரிப்பு நடிகர் விவேக் நடித்த திரைப்பட வசனம் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.
ரவுடித்தனத்தை
நிறுத்த வேண்டும் என அவருக்கு யோசனை சொல்லும்போது, மற்றவர்கள் செய்யும் அட்டூழியங்களை
நிறுத்த சொல்லு. பிறகு நான் ரவுடித்தனத்தை நிறுத்திக் கொள்கிறேன் என்பார் விவேக்...
அப்படிதான்
இருக்கிறது அமைச்சரின் பதில்.
அரசு நினைத்தால்
எதையும் செய்யலாம். ஆனால் அரசுக்கு மனம் இல்லை.
என்ன செய்வது......
அதற்காக
மதுவிக்கு எதிரான பிரச்சாரத்தை நாம் நிறுத்தப் போவதில்லை....
எஸ்.ஏ.அப்துல்
அஜீஸ்
=========================
No comments:
Post a Comment