"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"
நாள் - 77
பாலத்திற்கு கீழ் போதையில் தூங்கிய இளைஞர்கள்....!
எழுப்பிய
எஸ்.ஐக்கு அடி உதை.....!
வேப்பேரி குற்றப்பிரிவு காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக
பணிபுரிபவர் ராஜேந்திரன்.
இவர் 16.04.2014 இரவு புரசைவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது டவுட்டன் பாலத்தின் கீழே இரு இளைஞர்கள் சந்தேகம்படும்
படியாக படுத்து கிடந்தனராம்.
அவர்களிடம் ராஜேந்திரன் விசாரணை செய்தாராம்.
விசாரணையின்போது, அந்த இளைஞர்கள் ராஜேந்திரனிடம் தகராறு செய்தனராம்.
தகராறு முற்றவே அந்த இளைஞர்கள், ராஜேந்திரனை தாக்கினராம். இந்நிலையில்
அந்தப் பகுதியில் ஜீப்பில் ரோந்து வந்த போலீஸôர், ராஜேந்திரன்
தாக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்கள் அந்த இளைஞர்களை கைது செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள்,
புரசைவாக்கம் கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், பெரியமேடு கண்ணப்பர் திடல் பகுதியைச் சேர்ந்த பாளையம்
என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் பழைய துணி வியாபாரம் செய்து வருவதும், சம்பவத்தின்போது இருவரும் மதுபோதையில்
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை மனிதனை எப்படி மிருகமாக மாற்றுகிறது என்பதற்கு இந்த
சம்பவம் நல்ல உதாரணம் அல்லவா நண்பர்களே....
மதுவை ஒழிப்போம்...மனிதனாக வாழ முயற்சி செய்வோம்...
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================
No comments:
Post a Comment