"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "
நாள் - 98
முதலமைச்சர் உம்மன் சாண்டி திட்டவட்டம்.....!!
கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அடுத்த 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கேரளத்தில் 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்று உம்மன் சாண்டி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை உம்மன் சாண்டி கடந்த 7.10.14 அன்று திருவனந்தபுரத்தில் அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய உம்மன் சாண்டி, “மதுபானம் கிடைப்பதை படிப்படியாக குறைத்து, வரும் 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயன்று வருகிறது என்றார்.
அரசின் நடவடிக்கையில் பொதுமக்களின் பங்கேற்பும், ஒத்துழைப்பும் வேண்டும் என்றும், பூரண மதுவிலக்கை நோக்கமாகக் கொண்ட தங்கள் செயல்பாடுகளை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நோக்கத்தில் விரும்பிய பலனைப் பெற மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார் உம்மன் சாண்டி.
கேரளத்தில், காந்தி ஜயந்தி, ஸ்ரீநாராயண குரு பிறந்த நாள், நல்ல வெள்ளி போன்ற விடுமுறை நாள்களில் மதுக்கடைகளை மூடுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் 5 நட்சத்திர ஹோட்டல்கள் தவிர பிற ஹோட்டல்களில் இயங்கிவந்த சுமார் 700 மதுக்கூடங்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்திய நடவடிக்கையாக, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது
கேரளாவை போன்று தமிழகத்திலும் விரைவில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வர வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆவல். எதிர்பார்ப்பு...
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment