Wednesday, June 22, 2011

மருத்துக்கடைகள் - சில விபரீதங்கள்

மருந்துகள்  கெட்டுப்போகாமல் இருக்க மருந்துக்கடைகளில்  ஒரே சீரான தட்பவெப்பபத்திற்காக குளிர்சாதன வசதி செய்ய வேண்டும் என்பது அரசின் ஆணை. இந்த ஆணை சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால் நோய்களை குணமாக்கும் மருந்துகளே எமனாக மாறுகின்றன.



போலி மருந்துகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல அதிரடி ஆணைகளை தமிழக அரசு பிறப்பித்தது. அதில் ஒன்றுதான், மருந்துக்கடைகள் அனைத்தும் ஏ.சி. எனப்படும் குளிர்சாதன வசதி செய்ய வேண்டும் என்பது. மருந்துகளின் தரத்தை பாதுகாக்கவும், விரைவில் காலாவதியாகாமல் இருக்கவுமே இந்த நடவடிக்கை. ஆனால் மாநிலம் முழுவதும் ஒருசில நிறுவனங்களை தவிர, மற்ற மருந்துக்கடைகளில் குளிர்சாதன வசதிகள் செய்யப்படவில்லை. கடுமையான வெப்பம், குளிர் என பல தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பவே, மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இத்தகைய மருந்துக்கடைகளில் வாங்கப்படும் மருந்துகள் மூலம் நோயாளிகளுக்கு உண்மையில் முழுமையான நிவாரணம் கிடைக்கிறதா என்றால், இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.


நோய்கள் குணமாகாமல் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், சரியான சூழலில் விற்கப்படாத மருந்துகளை வாங்கிச் சாப்பிடும்போது, பல பக்கவிளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன. மருந்துக்கடை உரிமையாளர்களின் அலட்சியத்தால், சில நேரங்களில், நோயாளிகளுக்கு உயிர் போகும் ஆபத்தும் உண்டு. 
தமிழகம் முழுவதும் உள்ள மருந்துக்கடைகள் அனைத்தும், உடனடியாக குளிர்சாதன வசதி செய்யப்பட வேண்டும். புதிய உரிமம் கொடுக்கும்போது, விதிகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை நலவாழ்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இப்படி உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் மட்டுமே, மக்களை ஆபத்துகளில் இருந்து காப்பற்ற முடியும்

                                     அப்துல் அஜீஸ்

No comments: