Monday, July 4, 2011

மின்கலன் ஊர்தி - மக்கள் ஆர்வம்

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் அடிக்கடி உயர்ந்து வருவதால், பொதுமக்களின் கவனம்,  ஈ-பைக் எனப்படும் மின்கலன் ஊர்திகள் பக்கம் திரும்பியுள்ளது. மின்சாரத்தால் இயங்கும் இந்த ஊர்திகள், செலவை மிச்சப்படுத்துவதுடன், தேவையையும் நிறைவு செய்கின்றன.

விண்ணைத் தொடும் பெட்ரோல், டீசல் விலைகள் ! திகைக்கும் பொதுமக்கள்!! பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு,  இரு சக்கர ஊர்திகள் மூலம், அலுவலகம் செல்பவர்களை திக்குமுக்காட வைக்கிறது. பெட்ரோல், டீசல்காகவே, தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை, செலவழிக்க வேண்டிய கட்டாயம் பெரும்பாலான ஊர்தி ஓட்டிகளுக்கு  ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு முடிவுதான் என்ன என்ற கேள்வி எழுந்தநிலையில் அதற்கு விடை காண வந்துள்ளதுதான்,  ஈ-பைக் எனப்படும் மின்கலன் ஊர்தி.

மின்சாரத்தால் மட்டுமே இயங்கும் மின்கலன் ஊர்திகள்,  நீண்ட பயணம் செய்வதற்கும்  பயன்படுவதால், அதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நவீன தொழிற்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் இந்த மின்கலன் ஊர்திகளின்  விலைகளும் நடுத்தர மக்களின் வருவாய்க்கு ஏற்றவாறு இருக்கின்றன.
புகையை கக்காமல், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு, மின்கலன் ஊர்திகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், அரசு மானியத்தை வழங்குவதால்,  இரு சக்கர ஊர்தி தயாரிப்பு நிறுவனங்கள், மின்கலன் ஊர்திகளை அதிகம்  தயாரிக்க ஆர்வம் செலுத்தி வருகின்றன. இதையடுத்து,  சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இந்த நவீன  ஊர்திகள் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.



சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான மின்கலன் ஊர்திகள் மீது மக்களின் பார்வை ஏனோ சொல்லவில்லை. தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சாலைகளில் மின்கலன் ஊர்திகள் அதிகம் பயணிக்கத் தொடங்கியுள்ளன.
   
 அப்துல் அஜீஸ்

No comments: