தாலிபான் தீவிரவாதிகள்!
இப்படிதான்,
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்து, ஆட்டூழியம் புரிந்து வரும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை எதிர்த்து போராடும் இஸ்லாமிய போராளிகளை இந்திய ஊடகங்கள் அழைத்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்து, ஆட்டூழியம் புரிந்து வரும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை எதிர்த்து போராடும் இஸ்லாமிய போராளிகளை இந்திய ஊடகங்கள் அழைத்து வருகின்றன.
ஆப்கன் என்னும் இஸ்லாமிய நாட்டில், மேலை நாட்டு கலாச்சாரத்துடன் ஆட்சிப் புரிந்து வந்த ஆட்சியாளர்களை அகற்றி விட்டு, இஸ்லாமிய ஆட்சியை நிலை நாட்டியவர்கள் தாலிபான்கள்.
அதாவது, இஸ்லாமிய மாணவர்கள்.
ஓர் இறைக் கொள்கையை உள்ளத்தில் ஆழமாக பதியச் செய்து, இறைவனுக்காகவே வாழ்ந்து வரும் தாலிபான்களை ஒடுக்கச் சதி செய்தது அமெரிக்கா.
ஆப்கனை ஆக்கிரமிப்பு செய்து, தாலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது.
தீவிரவாதிகள் என பெயர் சூட்டி மகிழ்ந்தது.
அமெரிக்காவின் அந்த சதியில் ஊடகங்களும் விழுந்தன.
தாலிபான்களை தீவிரவாதிகள் என செய்திகளை வெளியிட்டன வெளிநாட்டு ஊடகங்கள்.
இந்திய ஊடகங்களும் அவற்றை உள்வாங்கிக் கொண்டன.
அங்காங்கே குண்டுகள் வெடித்து பலர் இறந்து விட்டார்களாம். அதற்கு தாலிபான்கள்தான் காரணமாம்.
இப்படி பொய்யான ஒரு பிரச்சாரத்தை இன்றளவும் செய்து வருகின்றன அமெரிக்க ஆதரவு ஊடகங்கள்.
சொந்த நாட்டை ஒருவன் ஆக்கிரமிப்பு செய்து அட்டகாசம் செய்து வருகின்றான்.
அவன் மட்டும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை.
கூடவே நட்பு நாடுகளையும் துணைக் அழைத்துக் கொண்டு, ஆப்கன் மக்களை அடிக்கடி மிரட்டி வருகின்றான்.
ஆனால், இதனை ஊடகங்கள் கண்டுக்கொள்வதில்லை.
அமெரிக்க ஆக்கிரமிப்பை விமர்சனம் செய்வதில்லை.
அமெரிக்காவை எதிர்த்து போராடும் தாலிபான்கள், அமெரிக்கர்களுக்கு எதிராக குண்டுகளை வெடிக்கச் செய்தால், உடனே தீவிரவாதிகள் குண்டு வைத்துவிட்டார்கள் என செய்திகளை வெளியிட்டு மகிழ்கிறார்கள்.
என்ன நியாயம் அய்யா இது?
உங்கள் வீட்டை ஒருவன் ஆக்கிரமிப்பு செய்து விட்டு, அட்டகாசம் செய்கிறான்.
அவனை வெளியேற்ற நீங்கள் போராடுகிறீர்கள். உங்களை தீவிரவாதி என்று அழைத்தால் எப்படி இருக்கும்.?
இது நியாயம்தானா என கேள்வி கேட்க மாட்டீர்கள்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, ராஜபக்சே அரசு புரிந்த கொடுமைகள் ஏராளம்.
அதனை எதிர்த்து போராடியவர்களை, போராளிகள் என நாம் அழைக்கிறோம்.
அப்படிதான் அழைக்க வேண்டும். அதுதான் நியாயம்.
தமிழ் மக்கள் மீது கொடுமை புரிபவர்களை எதிர்த்து போராடுபவர்கள் போராளிகள் அல்லாமல் வேறு யார்?
இலங்கை அரசை எதிர்த்து போராடும் தமிழர்களை போராளிகள் என அழைக்கும் தமிழக ஊடகங்கள், ஆப்கனில், சொந்த மண்ணில், அமெரிக்காவை எதிர்த்து போராடும் தாலிபான்களை மட்டும் ஏனோ, தீவிரவாதிகள் என்றே பெயர் சூட்டி மகிழ்கின்றன.
வெளிநாட்டு மற்றும் வட நாட்டு ஊடகங்களின் சதி வலையில் நம் தமிழக ஊடகங்களும் வீழ்ந்து விட்டது மிகப் பெரிய அநியாயம்.
தாலிபான்களின் போர் செயல்பாடுகளில், தந்திரங்களில் சில குறைபாடுகள் நிகழ்ந்து இருக்கலாம்.
அதனால், பலர் உயிரிழந்திருக்கக்கூடும்.
அதற்காக, சொந்த நாட்டின் சுதந்திரத்திற்காக, ஆக்கிரமிப்பை வெளியேற்றுவதற்காக போராடும் போராளிகளை, தீவிரவாதிகள் என்று அழைப்பது சரியா?
தாலிபான்களை தீவிரவாதிகள் என்று நீங்கள் அழைத்தாலும் சரி, செய்திகளை பக்கம் பக்கமாக வெளியிட்டாலும் சரி, ஆப்கன் மண்ணில் இருந்து அமெரிக்கா ஒருநாள் நிச்சயம் வெளியேறப்போவது உறுதி.
சொந்த மண்ணின் சுதந்திரத்திற்காக, விடுதலைக்காக போராடியவர்கள் என்றும் தோல்வி அடைந்ததில்லை.
சுதந்திரக் காற்றை ஆப்கன் மக்கள் வெகு விரைவில் சுவாகிக்க போகிறார்கள்.
அது, தற்போது நீங்கள் தீவிரவாதிகள் என அழைக்கும் தாலிபான்களால் ஆப்கன் மக்களுக்கு கிடைக்கப் போகிறது.
அப்போது, தமிழக ஊடகங்களில் தாலிபான்களை போராளிகள் என பெயரிட்டு செய்திகள் வரப்போவது நிச்சயம்.
போராளிகளுக்கு ஏது அய்யா தோல்வி !
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment