Sunday, October 2, 2011

தமாஷ்!

மாஷ்!



இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம்.

வாழ்க்கையில், உங்களுக்குகூட ஏற்பட்டு இருக்கலாம்.

கல்லூரியில் படித்தபோது, நண்பருடன் சேர்ந்து ஒருநாள் சென்னைக்கு வந்திருந்தேன்.

இந்தி படங்கள் பார்க்கும் ஆர்வம் காரணமாக,  விடுமுறை நாட்களில் நாங்கள் இரண்டு பேரும்  இப்படி, சென்னைக்கு வந்து செல்வது வழக்கம்.

வீட்டில் கல்லூரியில் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு வந்து விடுவோம்.

புதிதாக ரில¦ஸ் ஆன இந்தி பாடத்தை பார்த்துவிட்டு திரும்பவும் ஊருக்கு கிளம்பி விடுவோம்.

இப்படிதான், ஒருநாள் சென்னைக்கு நண்பருடன் வந்திருந்தேன்.

இரண்டு பேரும் பாரீஸ் கார்னர் சென்றோம்.

பூக்கடை போல¦ஸ் ஸ்டேஷன் அருகே இருக்கும் பூக்கடை மார்க்கெட்டிற்கு நண்பர் என்னை அழைத்துச் சென்றார்.

அவருக்கு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

அந்த மார்க்கெட்டில் இருந்த ஒரு கடையில், பளபளப்பான ஆப்பிள்களை கூடையில் அடுக்கி வைத்திருந்தார் வியாபாரி ஒருவர்.

ஐந்து ஆப்பிள்களை கொண்ட ஒரு குவியல் என 10 குவியல்களை அடுக்கி வைத்திருந்த அந்த ஆப்பிள் வியாபாரி, ஒன்று பத்து ரூபாய், ஒன்று பத்து ரூபாய் என ஒரு குவியலை காட்டி கத்திக் கொண்டிருந்தார்.

நண்பருக்கு ஆர்வம் அதிகமானது.



ஐந்து ஆப்பிள்கள். 10 ரூபாய்க்கு கிடைக்கிறது.

வாங்கி ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு, ஆப்பிள் வியாபாரியிடம் சென்றார்.

என்னப்பா ஆப்பிள் என்ன விலை என ஒரு குவியலை பார்த்து கேட்டார்.

10 ரூபாய் சார் என்றார் ஆப்பிள் வியாபாரி.

ஆப்பிள் நல்ல இருக்குமில்லே என திரும்ப கேட்டார் நண்பர்.

மிகச் சுவையாக இருக்கும் சார். இப்படிப்பட்ட ஆப்பிளை இதற்கு முன்பு நீங்கள் சாப்பிட்டு இருக்க முடியாது.

இது ஆப்பிள் வியாபாரியின் பதில்.

நண்பர் ஐந்து குவியல்களை எடுத்து தன்னுடைய பையில் போட ஆரம்பித்தார்.

ஐந்து குவியல்களில் 25 ஆப்பிள்கள் இருந்தன.



ஆப்பிள் வியாபாரியிடம் 50 ரூபாயை நீட்டினார் நண்பர்.

என்ன சார் 50 ரூபாய் கொடுக்கிறீங்க. 250 ரூபாய் கொடுங்க சார் என்றார் ஆப்பிள் வியாபாரி.

நண்பருக்கு உடனே அதிர்ச்சி ஏற்பட்டது.

என்னப்பா அநியாயம். ஒரு குவியல் 10 ரூபான்னா, 50 ரூபாதானப்பா கொடுக்கனும்.

ஒரு ஆப்பிள்தான் சார் 10 ரூபா. ஒரு குவியல் இல்லை என விளக்கம் சொல்ல ஆரம்பித்தார் ஆப்பிள் வியாபாரி.

இதனால், நண்பருக்கும், ஆப்பிள் வியாபாரிக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றது.

கடைசியாக 5 ஆப்பிள்களை நண்பரின் பையில் வலுக்கட்டாயமாக திணத்தார் அந்த ஆப்பிள் வியாபாரி.

அதனை வாங்கிக் கொண்ட நண்பர், 50 ரூபாயை ஆப்பிள் வியாபாரிடம் கொடுத்து கோபத்துடன் என்னை நோக்கி வந்தார்.



எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு ஏற்பட்டது.

அதை அடக்க முடியாமல் நண்பரிடம் வெளிப்படுத்தினேன்.

ஒரு குவியல் ஆப்பிளை வைத்துக் கொண்டு, 10 ரூபாய் என சொல்லி மக்களை மடையர்களாக மாற்றி, வணிகம் செய்யும் சென்னை வியாபாரிகள் குறித்து, நண்பருக்கு அப்போதுதான் கொஞ்சம், கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.

இருந்தாலும், அந்த ஆப்பிள் வியாபாரியின் சதூரியமான வணிக நுணுக்கத்தை கண்டு இரண்டு பேரும் நீண்ட நேரம்  பேசி சிரித்தோம்.

இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கும் வாழ்க்கையில், குறிப்பாக சென்னையில் ஏற்பட்டிருக்கும் இல்லையா!

அனுபவம் எல்லாம் தமாஷ்தான். சிரியுங்கள்.




எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: