"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "
நாள் - 88
குடிபோதையில் வாய்காலில் தவறி விழுந்து ஒருவர் சாவு.
திருவாரூரில் கடந்த 29.06.2014 அன்று குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் செம்மாங்குடி இருப்பைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் திருவாரூர் பாலாஜி நகரில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 29.06.2/014 அன்று குடிபோதையில் அப்பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் நடந்து சென்ற போது தவறி விழுந்துள்ளார்.
இதில் அவர் அதே இடத்தில் உயிரிந்தார். இதுகுறித்து திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இப்படிப்பட்ட செய்திகள் தினசரிகளில் நாள்தோறும் நாம் பார்க்கலாம். எனினும் அதை படித்து விட்டு நாம் மறு வேலைக்கு சென்று விடுகிறாம்.
மதுவுக்கு எதிராக எந்த ஒரு கல்லையும் எடுத்து வைப்பதில்லை. இதன்மூலம், இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன.
உடலுக்கு கேடு விளைவிக்கும் மது அருந்திவிட்டு, மரணத்தை சம்பாதிக்கும் பலர், தங்களது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை.
இதனால், அவர்களது குழந்தைகள் நல்ல கல்வி பெற முடியாமல் வறுமையில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தால்தான், அப்பாவி மக்கள் உயிரிழப்பதையும், அவர்களது குடும்பங்கள் தவிப்பதையும் தடுக்க முடியும்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment