சென்னையில் நான்......(12)
சென்னை ஒரு அருமையான மாநகரம்....
அமைதியான மாநகரம்...
இப்படியெல்லாம் சொல்ல எனக்கு ஆசைதான்.
ஆனால்,
சென்னையில் எனக்கு நேர்ந்த ஒருசில அனுபவங்களால், அப்படி என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை.
சென்னையில் பல ஊடக ஜாம்பவான்களை, இளம் செய்தியாளர்களை, இளம் பத்திரிகையாளர்களை, சமூக ஆர்வலர்கள், இஸ்லாமிய அறிஞர்களை நான் சந்தித்து இருக்கிறேன்.
அவர்களில் பலர் என்னுடன் நெருங்கி பழகி இருக்கிறார்கள்.
சகோதர அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்...
குறிப்பாக,
ஜோ.ஸ்டாலின் (மக்கள் டி.வி. தற்போது ஜுனியர் விகடன்)
மகாலிங்கம் (சன் டி.வி. தற்போது, புதிய தலைமுறை டி.வி.)
மணிகண்டன், (மக்கள் டி.வி. தற்போது புதிய தலைமுறை டி.வி.)
மெய்யருள் (மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)
திருமலை (ஜி. டி.வி. தற்போது வேந்தர் டி.வி.)
சீனிவாசன் (ஜி.டி.வி. தற்போது புதிய தலைமுறை டி.வி.)
கப்பார் (ஜி, டி.வி. தற்போது புதிய தலைமுறை டி.வி.)
ஜாகீர் (புதிய தலைமுறை டி.வி.)
செல்வநாயகம் (மக்கள் டி.வி. தற்போது ஜெயா டி.வி.)
அன்பரசன் (சன் டி.வி. தற்போது மக்கள் டி.வி.)
பிரசன்னா (ஜி டி.வி. தற்போது தந்தி டி.வி.)
மோசஸ் (ஜி டி.வி. தற்போது சன் டி.வி.)
ராஜசேகர் (சன் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)
பரணி (விஷுவல் எடிட்டர், புதிய தலைமுறை டி.வி.)
பிரம்மா (மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)
பாலாஜி (மக்கள் டி.வி. தற்போது பாலிமர் டி.வி.)
பூபதி (மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)
அருணாசலம் (மக்கள் டி.வி)
முரளி (மக்கள் டி.வி. தற்போது கேப்டன் டி.வி.)
ஆனந்த்பாபு (மக்கள் டி.வி. தற்போது தந்தி டி.வி)
ஞானம் (சன் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)
விஜய்தேவ் (மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)
கதிர் சரவணன் (மக்கள் டி.வி. தற்போது சன் டி.வி.)
சங்கரபாண்டி (மக்கள் டி.வி. தற்போது கலைஞர் டி.வி)
பாண்டியன் (ஜி டி.வி. தற்போது வேறு நிறுவனம்)
கிளிண்டன் (ஜி.டி.வி. தற்போது வேறு நிறுவனம்)
முருகப்பெருமாள் (மக்கள் டி.வி. தற்போது புதிய தலைமுறை டி.வி.)
சிராஜுல் ஹசன் (பொறுப்பாசிரியர் சமரசம் இதழ்)
பேராசிரியர் சேமுமு முஹம்மத் அலி
சகோதரர் அப்துர் ரகீப் (இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம்)
சகோதரர் சிக்கந்தர் (இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம்)
சகோதரி பாத்திமா முஸப்பர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
இப்படி, பல அருமையான நல்ல உள்ளங்களை, இதயங்களை, நான் சந்திக்க வாய்ப்பு அளித்தது இந்த சென்னை மாநகரம்தான்.
அவர்கள் மூலம் பல நல்ல அனுபவங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் ஆகியவற்றை கற்றுக் கொண்டது இந்த சென்னையில்தான்.
அதேநேரத்தில்,
ஒருசில நாதாரிகளை நான் சந்தித்ததும் இந்த சென்னையில்தான்.
அந்த நாதாரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கி, ஊடகத்துறையில் பல அருமையான வாய்ப்புகளை இழந்ததும் இந்த சென்னையில்தான்.
அந்த நாதாரிகளின் முகங்கள் என் கண் முன்னே, வந்து செல்லும்போதெல்லாம், சென்னையை நினைத்து நான் வேதனை அடைவது உண்டு...
இப்படிப்பட்ட ஏராளமான நாதாரிகளின் புகலிடம் சென்னையாக இருக்கிறதே என மன வேதனை அடைந்தது உண்டு.
ஆனால், இவையெல்லாம் எனக்கு பாடங்கள்.
இப்படி, பல வாழ்க்கை பாடங்களை சொல்லி தந்த சென்னையை நான் எப்படி மறக்க முடியும்...
(அனுபவங்கள் தொடரும்)
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================