மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!
நாள் - 104
தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்கும் வரை மதிமுகவின் போராட்டம் ஓயாது....!
வைகோ அறிவிப்பு.....!!
தமிழகத்தில் ஆறாக ஓடும் மதுக்கடைகளை இழுத்து மூட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பெண்களின் கண்ணீரை துடைக்க தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தெருக்கு தெரு அதிகரித்து வரும் டாஸ்மாக் மது கடைகளால் குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகிறார்கள் என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் கற்பழிப்பு, விபத்து போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும், எனவே மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து நடக்கும் சூழ்நிலை உள்ளது என்றும், பெற்றோர்களிடம் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை பற்றி தவறாக கூறி பெற்றோர் அடியாட்களை ஏவி ஆசிரியர்களை தாக்கும் சூழ்நிலை உள்ளது என்றும் வைகோ தெரிவித்துள்ளார். .
வேலூர் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சரி.....
இவையெல்லாம் வைகோ எங்கே கூறினார் என்று நீங்கள் வினா எழுப்புவது புரிகிறது.
காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பணை கட்டும் செயலை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடுத்திட வேண்டியும் தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்க வேண்டியும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அய்யம்பேட்டை மதகடி பஜாரில் கடந்த 18.12.2014 அன்று மக்களோடு கலந்துரையாடினார்.
அப்போது பேசியபோதுதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மதுவுக்கு எதிராக வைகோவின் போராட்டத்திற்கு நமது ஆதரவு எப்போதும் உண்டு.
மதுவுக்கு எதிரான அவரது பணி தொடரட்டும்.
தமிழகத்தில் இருந்து மது ஒழியட்டும்....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================
No comments:
Post a Comment