Thursday, April 30, 2015

வாழ்வு இனிக்க...!

வாழ்வு இனிக்க...!


நான் எழுதிய முதல் நூல்.

என்னுடைய  இந்த முதல் நூல் கடந்த 1993ஆம் ஆண்டு வேலூரில் நடந்த எளிய விழாவில் நூல் வெளியிடப்பட்டது.


நூல் வெளியிட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

சிறப்பு விருந்தினர்களுடன் நான்.



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

அப்துல் பாசித்...!

அப்துல் பாசித்...!




நான் எழுதிய மற்றொரு நூல்.

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக கடந்த 2006-2011 வரை இருந்து அப்துல் பாசித் சிறப்பாக பணியாற்றினார்.

ஆம்பூரை தலைமையகமாக கொண்டு தனித் தாலுகா கொண்டு வந்தது.

பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு இருந்த தடைகளை நீக்க சட்டப்பேரவையில் குரல் கொடுத்து அரசாணை கொண்டு வர முயற்சி செய்து வெற்றி பெற்றது.

ஆம்பூரில் 11கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தக மையத்தை கொண்டு வர முயற்சி செய்து வெற்றி பெற்றது.

சித்தா ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவர்கள் எந்த தடையும் இல்லாமல் ஆங்கில மருத்துவ சிகிச்சையை நோயாளிகளுக்கு அளிக்க அரசாணை பெற்று தந்தது.

என இப்படி 5 ஆண்டுகளில் ஏராளமான பணிகளை அப்துல் பாசித் செய்துள்ளார்.

பாசித் செய்த பணிகள் தொகுதிக்கு ஆற்றிய சேவைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

நூலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்துரை வழங்கிய போது பாசித்தை இந்திய குலிஸ்தானின் இன்பப் பூ என்றும் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைத்த ஒளிமுத்து என்றும் பாராட்டி இருந்தார்.

இந்த நூல் 2011ஆம் ஜனவரி மாதம் வெளியானது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

கறிவேப்பிலை.....!

கறிவேப்பிலை.....!

பயன்கள் நிறைந்த கறிவேப்பிலையை ஒதுக்காதீர்....!


மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.

இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது.நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.

நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.

அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.

முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான்

கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.


சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.

கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

படித்தது பயன் உள்ளது

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Tuesday, April 28, 2015

ஒரு கல..கல..பேய்.

காஞ்சனா 2....!


பேய்...பிசாசுக்கு மக்கள் மத்தியில் ஒருவித பயம் இருந்தாலும் அதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆர்வம் இருக்கவே செய்கிறது.

அதனால்தான் என்னவோ பேய் தொடர்பான திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவேதான் அது எப்படி இது எப்படி என கேள்விகள் எதுவும் கேட்காமல் பேய் படங்களை பார்க்க செல்கின்றனர்.

இதை நன்கு அறிந்து கொண்டு தொடர்ந்து பேய் படங்களை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ்.

காஞ்சனா 2 திரைப்படமும் விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்வதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லை.

ரசிகர்களை சிறிது நேரம் கூட யோசிக்க வைக்காமல் படம் நகர்வதால் காஞ்சனா 2 பேய் படமும் வெற்றி அடைந்துள்ளது என கூறலாம்.

காஞ்சனா 2..!

ஒரு கல..கல..பேய்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

ஒரு கன்றாவி...!!

ஓ.காதல் கண்மணி...!

ஒரு கன்றாவி...!!


பின்னே என்னங்க.

காதல் திருமணம் இவையெல்லாம் எவ்வளவு புனிதமானது.

அதை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த அறிவுஜீவி மணிரத்னம் படம் எடுத்து இளைய சமுதாயம் தவறான பாதைக்கு செல்ல வழி காட்டி இருக்கிறார்.

காதல் பண்ணு. ஆனால் கல்யாணம் பண்ணிக்காதே.
நல்லா ஜல்சா பண்ணு. பின்னர் விரும்பினால் கல்யாணம் பண்ணிக்கோ. இல்லே பண்ணிக்காமே அப்படியே ஜல்சாவை கன்டிநியூ பண்ணு என்ற புதிய தத்துவத்தை படத்தில் சொல்லி இளைஞர்களை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறார் மணிரத்னம்.

இந்திய கலாச்சாரம் ஏன் மனித கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் ஆகியவற்றை உடைத்து சின்னாபின்னம் செய்யும் வகையில் இந்த படத்தின் மூலம் கலாச்சார படையெடுப்பை நடத்தியுள்ளார் இயக்குநர்.

அத்துடன் ஐ.டி. உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணியாற்றி கை நிறைய சம்பளம் வாங்கும் இளைஞர்கள் அனைவருமே பொம்பளே பொறுக்கிகள். இப்படிதான் அவர்களின் வாழ்க்கை இருப்பதாக படத்தில் மறைமுகமாக சொல்கிறார் மணிரத்னம்.

வழக்கம் போல இந்த படத்திலும் ரயில் பேருந்து டாக்ஸியில் பயணித்து காதல் கும்மாளம் அடிக்கும் நாயகன் நாயகிகள் மழையில் நனைந்தும் ஆடுகின்றனர்.

திருமண உறவையே சீர்குலைத்து தமிழர் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றிற்கு வேட்டு வைக்கும் இந்த படத்தை எதிர்த்து ஒரு தமிழர் அமைப்பு கூட குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது ஆச்சரியம் அளிப்பது மட்டுமல்ல வேதனையும் தருகிறது.

ஓ.காதல் கண்மணி... ஒரு கன்றாவி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

எனக்கு ஒரு டவுட்டு...!

எனக்கு ஒரு டவுட்டு...!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் திமுக தரப்பில் க.அன்பழகனின் வாதத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது சரியா?

வழக்கில் தொடர் இல்லாத ஒருவர் அரசியல் உள்நோக்கத்துடன் தமது வாதங்களை வைக்கும் போது அந்த வாதங்கள் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறுவது சரியா ?

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தாங்கள் வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறிய கர்நாடக அரசு தற்போது வழக்கறிஞரை நியமித்து ஆணை பிறப்பித்தது சரியா?

இதை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்குமா?

எனக்கும் என்னுடைய நண்பருக்கும் ஒரு பிரச்சினை. வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது.

இந்த வழக்கில் சிறிதும் தொடர்பே இல்லாத என்னுடைய எதிரி ஒருவர் என்னை பழி வாங்கும் நோக்கில் தாமாகவே முன் வநது எனக்கு எதிராக வாதங்களை வைத்தால் அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது நியாயமா. ?

சரியான நீதியா ?

வழக்கில் சிறிதும் தொடர்பே இல்லாதவர்கள் தங்களையும் வழக்கில் இணைத்துக் கொள்ள இந்திய சட்டம் அனுமதி அளிக்கிறதா?

ஏனென்றால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் க.அன்பழகன் தரப்பு தங்களது வாதங்களை வைக்க முன் வந்த போது உங்களுக்கும் இந்த வழக்கிற்கும் என்ன சம்பந்தம் என நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது அன்பழகன் தரப்பு வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ?

என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்குமா ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

அரை லூஸ்...!

அரை லூஸ்...!


ஜெயா தொலைக்காட்சி நிருபரா ஓடி போயிடு. இல்லாவிட்டால் மைக்கால் அடிப்பேன்.

தினமலர் நிருபரா கேள்வி கேட்காதே.

இப்படி டெல்லியில் நமது ஊடக சகோதரர்களை எச்சரித்து மிரட்டியுள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.

இப்படிப்பட்டவரை அரை லூஸ் என அழைக்காமல் பின்னர் எப்படி அழைப்பது.

இந்த அரை லூஸ் பின்னாடி திமுக காங்கிரஸ் பிஜேபி விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லிக்கு சென்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து இருக்கிறார்கள்.

காரியம் நடக்குமா.

நல்லவேளை முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் செல்லவில்லை.

தங்களை விஜயகாந்த் சந்திக்க வரவில்லை என்ற வருத்தம் முஸ்லிம் அமைப்பு தலைவர்களிடம் இருந்தது.

டெல்லியில் விஜயகாந்த்தின் நடவடிக்கைகளை கண்டு முஸ்லிம் தலைவர்கள் இப்போது நிம்மதி அடைந்து இருப்பார்கள்.

இந்த அரை லூஸை நம்பி வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க திமுக ஆர்வமாக இருப்பது வியப்பு அளிக்கிறது.

எல்லாம் பதவி சுகம்தான் காரணம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

நியாயமா மக்களே....!

தீர்ப்பு இப்படிதான் இருக்க வேண்டும் என்று கூறுவது நியாயமா மக்களே....!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

அதேநேரத்தில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு இப்படிதான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி இருப்பது நியாயமா.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை.

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கூடாது என மறைமுகமாக சொல்கிறதா உச்சநீதிமன்றம்.

ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வந்தால் நீதி நியாயம் வென்று விட்டது என கருத்து கூறும் திமுக தலைவர் கருணாநிதி 2 ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நீதி வென்று விட்டது என கூறுவாரா.

ஒன்று மட்டும் உறுதியாக புரிகிறது.

ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டால் தங்களால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற முடியாது.

ஆட்சியை கைப்பற்றி மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர்த்த முடியாது என திமுக தரப்பு உறுதியாக நம்புகிறது.

அதனால்தான் ஜெயலலிதாவின் வழக்கில் திமுக அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது.

நாட்டில் எவ்வளவோ ஊழல் வழக்குகள் உள்ளன. ஏன் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் புகார்கள் உள்ளன.

ஊழலை ஒழிக்க திமுகவிற்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் இந்த வழக்குகளில் அக்கறை செலுத்தாமல் இருப்பது ஏன் ?

இப்படி மக்கள் கேட்பது நம் காதுகளில் விழுகிறது.

நீதிமான்களே பதில் தேவை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Saturday, April 25, 2015

சிதைக்கப்படும் உறவுகள் - 3

யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்....!


(சிதைக்கப்படும் உறவுகள் - 3)

மொல்லமாரி கேப்மாரி நாதாரி பேமானி இப்படி எந்த வார்த்தைகளிலும் அந்த கேடு கெட்ட மனிதனை அழைக்கலாம்.

ஏன் உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் அத்தனை மொழிகளிலும் உள்ள பயன்படுத்தக் கூடாத கெட்ட வார்த்தைகளில் அந்த துரோகியை அழைப்பதில் தவறு இல்லை.

சிரிக்க சிரிக்க பேசி பலரின் மூளையை சலவை செய்து அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து இருக்கிறான் இந்த பாவி.

இந்த மதி கெட்ட மனிதனின் வலையில் வீழ்ந்து வீழ்ச்சியை சந்தித்தவர்களில் நானும் ஒருவன்.

தினமும் காலை நேரத்தில் செல்பேசியில் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் வரை எனக்கு நன்மை செய்வது போன்ற பாணியில் பேசுவான்.
அவனது அந்த பேச்சு என் மீது அந்த பொறம்போக்கிற்கு மிகப் பெரிய அக்கறை இருப்பதாக காட்டியது

அதனால்தான் அவனை முழுமையாக நம்பி விட்டேன்.

பின்னர்தான் எனக்கு அவனுடைய உண்மையான முகம் தெரிய வந்தது.

அதற்குள் என்னுடைய முன்னேற்றத்திற்கு வேட்டு வைக்கப்பட்டு விட்டது.

எல்லாம் அந்த துரோகியை உண்மையாக நம்பியதுதான் காரணம்.
எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இவன் சிரிக்க சிரிக்க பேசி அவர்களின் மூளையை சலவை செய்து அதன்மூலம் அவர்களது வளர்ச்சியை தடுத்து இருக்கிறான்.

இந்த தகவல் நண்பர் ஒருவர் மூலம் பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது.

எனவே நண்பர்களே உங்களிடம் சிரிக்க சிரிக்க பேசி உங்கள் மீது உண்மையாகவே அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் நபர்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்கள்.

குறிப்பாக ஊடகத்துறையில் இருக்கும் நண்பர்கள் அதே துறையில் உள்ள இதுபோன்ற நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

இல்லாவிட்டால் உங்களது வளர்ச்சி முன்னேற்றம் தடுக்கப்படும்.

ஏன் நல்ல வாய்ப்புகள் பின்னர் கிடைக்காமலேயே போய்விடும்.

அந்த பொறுக்கியை உண்மையாக நம்பியதால் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அனுபவம் இது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Friday, April 17, 2015

காதல் இல்லாமல் எதுவுமே இல்லை....!

காதல் இல்லாமல் எதுவுமே இல்லை....!

இயக்குநர் மணிரத்னம்.....!!




உலகத்தில் காதல் இல்லாமல் எதுவுமே இல்லை.

கணவன் - மனைவி, அம்மா - மகன், அப்பா - மகன் என நிறைய பரிணாமங்களில் காதல் இருக்கிறது.

ஆகையால் காதலை வைத்து திரைப்படம் பண்ணுவதற்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

========================


தப்பு பண்ணினாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்....!

இயக்குநர் மணிரத்னம்.....!!

படம் தோல்வி அடைந்தால் அதை ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும்.

படத்தில் தப்பு இருக்கலாம். ஆனால், நான் என்ன நினைத்தேனோ அதை அடைந்திருக்கிறேனா என்பதுதான் முக்கியம்.

தப்பு செய்வதற்கு பயப்படாமல்தான் படம் பண்ணுகிறோம்.

தப்பு பண்ணினாலும் மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்.

அனைவருக்குமே இறங்கு முகம் வரும்.

அதை பார்த்து பயப்படாமல் இருக்க வேண்டும்.

ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால் எதனால் என்று கற்றுக் கொண்டு அதை அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன். அவ்வளவுதான்.

=======================

மனிதரில் இத்தனை நிறங்களா...!

மனிதரில் இத்தனை நிறங்களா...!


ஏக இறைவனின் படைப்புகளில் மனித படைப்பு மிகவும் அற்புதமானது.

வித விதமான மனிதர்கள். ஆனால் அனைவருக்கும் தனித்தனி பண்புகள். குணங்கள். திறமைகள்.

மனிதரில் இத்தனை நிறங்களா என ஆச்சரியப்படும் அளவுக்கு இறைவன் அற்புதம் நிகழ்த்தியுள்ளான்.

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.



கலை துறையில் ஆர்வம் கொண்ட எழிலன் ஒரு பல்கலை வித்தகர்.
சாதிக்க துடிக்கும் நல்ல பண்பாளர்.

அவரிடம் இருக்கும் பல திறமைகளை கண்டு நான் வியப்பு அடைவது உண்டு.

இறைவனின் படைப்பில் இத்தனை அற்புதங்களா என நினைப்பது உண்டு.

பல திறமைகள் கொண்ட எழிலன் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Thursday, April 16, 2015

ஓர் அழகிய பிரார்த்தனை....!

ஓர் அழகிய பிரார்த்தனை....!

ஜூம்மாவிற்காக சென்னை தி.நகர் அஞ்சுமன் பள்ளிவாசலுக்கு சென்றிருந்தேன்.

அண்ணா அறிவாலயம் எதிரே இருக்கும் விஜயராகவ ராவ் சாலையில் புகழ் பெற்ற இந்த பள்ளிவாசல் உள்ளது.

எளிய உர்துவில் குறிப்பிட்ட ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு மவுலவி ஆற்றிய ஜூம்மா பேருரையை இன்னும் மனது அசை போட்டுக் கொண்டே இருக்கிறது.

தமது உரையின் இறுதியில் மவுலவி ஓர் அழகிய பிரார்த்தனை செய்தார்.
உலக அமைதிக்காக இந்தியாவின் வளர்ச்சிக்காக ஏக இறைவனிடம் துவா செய்தார்.

இறைவா இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ வழியை ஏற்படுத்தி தா.

நாம் அனைவரும் இந்த நாட்டின் மக்கள். எனவே நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளை பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற எங்களுக்கு சக்தியை தா.

முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்முடைய பிற சமுதாய மக்களை உண்மையாக நேசித்து அவர்களுடன் பாசத்துடன் நேசத்துடன் பழகி வாழ வழியை ஏற்படுத்தி தா.

நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னேற்றத்தை தா.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைய முயலும் சக்திகளிடமிருந்து எங்களைக் காப்பாற்று.

உலக அளவில் இந்தியாவின் புகழ் பரவ வழியை ஏற்படுத்தி தா.

இப்படி ஓர் அழகிய பிரார்த்தனையை மவுலவி செய்த போது ஜூம்மா தொழுகைக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆமீன் என்று முழக்கம் எழுப்பினர்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

பயம்....!

பயம்....!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆகி விட்டால் அவர் மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பது உறுதி.

ஏன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அவர் தலைமையிலான அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தற்போது திமுக தரப்பு செய்து வரும் சில செயல்களின் மூலம் இப்படி நடக்க வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும்.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடம் மாற்றம் செய்யக்கூடாது என திமுக தரப்பு போர்க்கொடி தூக்கி இருப்பதன் மூலம் எங்கே ஜெயலலிதா விடுதலை ஆகிவிடுவாரோ என்ற பயம் திமுகவிற்கு இருப்பது தெளிவாக தெரிகிறது.

ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டால் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது.

மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும் கனவு கலைந்து போகும்.

எனவேதான் ஜெயலலிதா வழக்கில் திமுக மிகவும் அக்கறையுடன் இறங்கியுள்ளது.

ஆனால் திமுக தரப்பு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்து வருகிறது.

மக்களிடையே ஜெயலலிதாவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்படிதான் தமிழக தேனீர் கடைகளில் ஓட்டு போடும் மக்கள் விவாதங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் நடத்தும் இந்த விவாதங்களை கூர்ந்து கவனித்தால் நான் சொல்வது சரி என தெரியவரும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

காலத்தை வென்றவன்....!

காலத்தை வென்றவன்....!



இளைஞர் கதீர் சரவணனை நான் மக்கள் தொலைக்காட்சியில் பணி புரிந்த போது முதல் முறையாக சந்தித்தேன்.

FTP பிரிவில் மிகவும் துடிப்புடன் அவர் பணி ஆற்றியது என்னை வெகுவாக ஈர்த்தது.

அத்துடன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் துடிப்பு சரவணனிடம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

ஓய்வு நேரத்தில் படத்தொகுப்பு கலையை அவர் கற்றுக் கொண்டார்.

மக்கள் தொலைக்காட்சியிலேயே தமக்கு படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என சரவணன் எதிர்பார்த்தார்.

ஆனால் பல காரணங்களால் அது நிறைவேறவில்லை.

பொறுமை காத்தார் சரவணன். பலன் இல்லை.

பிறகு அவர் சிறிதும் கூட தயங்கவில்லை.

தனது பதவியை துறந்து கிராமத்திற்கு செல்வதாக அவர் அலுவலகத்தில் சொன்னபோது அனைவரும் சிரித்து விட்டோம்.

பின்னர் தனது கடுமையான முயற்சியால் சில தொலைக்காட்சிகளில் பணியாற்றிய சரவணன் இன்று உலகப் புகழ் பெற்ற சன் தொலைக்காட்சியில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரிந்து வருகிறார்.

தமிழக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஓர் இளைஞன் தனது கடும் முயற்சியால் இன்று வெற்றி கனியை பறித்துள்ளார்.

அதுவும் போட்டி பொறாமை அரசியல் செய்து மற்றவர்களை வீழ்த்தி மகிழ்ச்சி அடைதல் என அனைத்து கெட்ட குணங்களும் நிறைந்த மனிதர்கள் அதிகம் கொண்ட ஊடகத்துறையில் சரவணன் சாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
காலத்தை வென்ற கதீர் சரவணனுக்கு வாழ்த்துக்கள்.

சரவணன் இன்னும் சாதிக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.