Tuesday, April 28, 2015

நியாயமா மக்களே....!

தீர்ப்பு இப்படிதான் இருக்க வேண்டும் என்று கூறுவது நியாயமா மக்களே....!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

அதேநேரத்தில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு இப்படிதான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி இருப்பது நியாயமா.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை.

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கூடாது என மறைமுகமாக சொல்கிறதா உச்சநீதிமன்றம்.

ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வந்தால் நீதி நியாயம் வென்று விட்டது என கருத்து கூறும் திமுக தலைவர் கருணாநிதி 2 ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நீதி வென்று விட்டது என கூறுவாரா.

ஒன்று மட்டும் உறுதியாக புரிகிறது.

ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டால் தங்களால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற முடியாது.

ஆட்சியை கைப்பற்றி மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர்த்த முடியாது என திமுக தரப்பு உறுதியாக நம்புகிறது.

அதனால்தான் ஜெயலலிதாவின் வழக்கில் திமுக அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது.

நாட்டில் எவ்வளவோ ஊழல் வழக்குகள் உள்ளன. ஏன் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் புகார்கள் உள்ளன.

ஊழலை ஒழிக்க திமுகவிற்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் இந்த வழக்குகளில் அக்கறை செலுத்தாமல் இருப்பது ஏன் ?

இப்படி மக்கள் கேட்பது நம் காதுகளில் விழுகிறது.

நீதிமான்களே பதில் தேவை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: