Tuesday, April 28, 2015

எனக்கு ஒரு டவுட்டு...!

எனக்கு ஒரு டவுட்டு...!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் திமுக தரப்பில் க.அன்பழகனின் வாதத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது சரியா?

வழக்கில் தொடர் இல்லாத ஒருவர் அரசியல் உள்நோக்கத்துடன் தமது வாதங்களை வைக்கும் போது அந்த வாதங்கள் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறுவது சரியா ?

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தாங்கள் வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறிய கர்நாடக அரசு தற்போது வழக்கறிஞரை நியமித்து ஆணை பிறப்பித்தது சரியா?

இதை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்குமா?

எனக்கும் என்னுடைய நண்பருக்கும் ஒரு பிரச்சினை. வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது.

இந்த வழக்கில் சிறிதும் தொடர்பே இல்லாத என்னுடைய எதிரி ஒருவர் என்னை பழி வாங்கும் நோக்கில் தாமாகவே முன் வநது எனக்கு எதிராக வாதங்களை வைத்தால் அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது நியாயமா. ?

சரியான நீதியா ?

வழக்கில் சிறிதும் தொடர்பே இல்லாதவர்கள் தங்களையும் வழக்கில் இணைத்துக் கொள்ள இந்திய சட்டம் அனுமதி அளிக்கிறதா?

ஏனென்றால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் க.அன்பழகன் தரப்பு தங்களது வாதங்களை வைக்க முன் வந்த போது உங்களுக்கும் இந்த வழக்கிற்கும் என்ன சம்பந்தம் என நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது அன்பழகன் தரப்பு வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ?

என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்குமா ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: