என்ன ஒரு கருணை.....!
இறை வேதமான திருக்குர்ஆனை, பொருள் அறிந்து, ஆழ்ந்து படித்து சிந்தித்தால், ஓர் உண்மை நமக்கு மிக தெளிவாக புரிகிறது.
நம் கண் முன் வந்து நிற்கிறது.
மனித சமுதாயம் மீது இறைவன் காட்டும் அளப்பரிய கருணைதான் அது.
மனித சமுதாயம் மிக அழகிய சமுதாயமாக வாழ வேண்டும் என ஏக இறைவன் விரும்புகிறான்.
மனிதர்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக, ஒற்றுமையாக மிக சிறப்பாக வாழ வேண்டும் என்பது இறைவனின் ஆசையாக இருக்கிறது.
அதைத்தான் இறைவன் விரும்புகிறான்.
திருக்குர்ஆனில், மனிதர்களே, உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.
இறைவனின் கட்டளைகளை மீறாதீர்கள்.
ஏக இறைவனை நம்புங்கள்.
அவனுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
அதன்மூலம் நீங்கள் உயர்வை பெறலாம் என திரும்ப திரும்ப இறைவன் கூறி மனிதர்களை, நன்மையின் பக்கம் அழைக்கிறான்.
நபிமார்களின் வரலாறுகளை கூறுகின்றான்.
நம்ப மறுத்து, தங்கள் போக்கில் சென்ற மனிதர்கள் எப்படி அழிந்தார்கள் என்று விவரித்து கூறுகின்றான்.
அதன்மூலம் படிப்பினைகள் பெற்று மனிதர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும் என இறைவன் விரும்புகிறான்.
இம்மை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் மறுமை வாழ்க்கையிலும் மனிதன் நன்மை பெற வேண்டும்.
அதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கிறது.
பல இடங்களில் மனிதர்களை எச்சரிக்கை செய்து நன்மையின் பக்கம் அழைக்கின்றான்.
இந்த எச்சரிக்கைகள் கூட மனிதர்களின் நன்மைக்காகவே இருக்கிறது.
மனித சமுதாயத்தின் ஆனந்த வாழ்விற்காகவே இருக்கிறது.
இதைத்தான் திருக்குர்ஆனியில் நாம் காண முடிகிறது.
மனித சமுதாயம் நல்ல சமுதாயமாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் ஆசையாக, விருப்பமாக இருக்கிறது.
ஆக,
மனித சமுதாயம் மீது இறைவனுக்கு என்ன ஒரு கருணை...!
ஆனால்,
இறைவனின் இந்த விருப்பத்தை மனிதர்கள், சரியாக புரிந்துக் கொள்ளாமல், விளங்கிக் கொள்ளாமல் என்ன ஒரு ஆட்டம் ஆடுகிறார்கள்.
இறைவனுக்கு மாறு செய்வதாக நினைத்துக் கொண்டு, தங்களை தாங்களே அல்லவா அழித்துக் கொள்கிறார்கள்.
அதன்மூலம் அமைதியை இழந்து தவிக்கிறார்கள்.
இப்படி தம் போக்கில் செல்லும் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் எத்தனை.
திருக்குர்ஆனை பொருள் அறிந்து, கொஞ்சம் படித்து சிந்தித்து பாருங்கள்.
மனிதர்கள் மீது இறைவன் காட்டும் பரிவு, கருணை, உங்களுக்கே தெரியவரும்.
புரியும்.
மனித சமுதாயம் மீது அளப்பரிய கருணை காட்டும் ஏக இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
S.A.Abdul Azeez
Journalist.
No comments:
Post a Comment