Sunday, September 4, 2016

அநியாயம்.....! அக்கிரமம்....!!

ஐய்யய்யோ...! அநியாயம்.....!!அக்கிரமம்....!!! கேட்பதற்கு யாருமே இல்லையா....!


பொதுத்துறை வங்கியான விஜயா வங்கியில் (Vijaya Bank) சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் எனக்கு ஒவ்வொரு வாரமும் என்னுடைய செல்பேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வருவது வழக்கம்.

அதில், என்னுடைய வங்கி கணக்கு இருப்பு குறித்த விவரங்கள் இருக்கும்.

அதேபோன்று, இந்த வாரமும் (04.09.2016) என்னுடைய செல்பேசிக்கு எஸ்.எம்.எஸ். வந்தது.

அதைப் பார்த்ததும் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

காரணம்,

For every txn at Vijaya Bank ATM, we donate 50ps for a social cause. You Transact, we  Donate. Vijaya Bank.

என்ற தகவல் எனக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

இனி நான் ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணம் எடுக்கும்போது, என்னுடைய அனுமதி இல்லாமலேயே விஜயா வங்கி, என்னுடைய கணக்கில் இருந்து 50 காசுகளை எடுத்துக் கொள்ளும். அதாவது பிடுங்கிகொள்ளும்.

அந்த 50 காசுகள் சமூக நலப்பணிக்காக அனுப்பி வைக்கப்படும் என விஜயா வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் பொதுத்துறை வங்கி எப்படி அவர்களின் பணத்தில் இருந்து 50 காசுகளை எடுக்கலாம்.

அதை சமூகப் பணிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

விஜயா வங்கியில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி பேர் ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுத்தால், சுமார் 50 லட்சம் ரூபாய் வரை விஜயா வங்கி தானாகவே எடுத்துக் கொள்ளும்.

இப்படி, ஆண்டு ஒன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை வாடிக்கையாளர்களின் பணத்தை பொதுத்துறை வங்கியான விஜயா வங்கி எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இப்படி, ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும், தங்களுடைய வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து அவர்களின் அனுமதி இல்லாமலேயே 50 காசுகளை பிடித்தம் செய்து வந்தால், நாடு முழுவதும் ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை வங்கிகளுக்கு சுலபமாக வருமானம் கிடைக்கும்.

அந்த வருமானம் மத்திய அரசுக்கு செல்லும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பிஜேபி தலைமையிலான மத்திய அரசு, பொது மக்களின் பணத்தை எப்படி,  சுருண்டுகிறது என்பதற்கு இது ஒன்றே சரியான உதாரணமாக இருக்கிறது.

மக்களை வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வைத்து அதை மிகப் பெருமையாக கூறிக் கொள்ளும், பிஜேபி அரசு, அதன்மூலம், எளிதாக பணத்தை சுருண்டும் வழியை ஏற்படுத்தி இருப்பது தெள்ள தெளிவாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை கேட்க யாருமே இல்லையா....?

இதுதான் என்னைப் போன்ற வங்கி வாடிக்கையாளர்களின் கேள்வி.

S.A.Abdul Azeez
Journalist

No comments: