நேரமில்லை....!
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பு...
ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பு...
காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பு...
இப்படி,
உலக அளவில் நடக்கும் சர்வதேச மாநாடுகளில் நம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
அத்துடன்,
உலக தீவிரவாதம்,
உலக பொருளாதாரம்,
உலக நதிநீர் பிரச்சினை
உலக சுற்றுச்சூழல் குறித்த கவலை...
என
பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநாடுகளில் கம்பீரமாக உரையாற்றி நல்ல ஆலோசனைகளை தரும் பிரதமர் மோடி, உலகம் எப்படி வேகமாக முன்னேற வேண்டும் என்றும் பல்வேறு திட்டங்களை முன்வைக்கிறார்.
மேலும்,
அமெரிக்க அதிபர் ஒபாமா,
சீன அதிபர், ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர், இலங்கை அதிபர், வங்கதேச பிரதமர் என பல நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசும் பிரதமர் மோடி, அந்நாடுகளுடன் இந்தியாவிற்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கிறார்.
ஆலோசனை செய்கிறார்.
ஆனால்,
இந்தியாவில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க மட்டும் மோடிக்கு ஆர்வமில்லை.
காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அவர் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
விரும்பவில்லை.
காவிரி நதிநீர் பிரச்சினையில் தாம் தலையிட முடியாது என்கிறார்.
முல்லைப் பெரியாறு, பாலாறு என பல்வேறு நதிநீர் பிரச்சினைகளும் லைன் கட்டி நிற்கின்றன.
அதற்கு எந்த தீர்வையும் மோடி இதுவரை காணவில்லை.
ஆலோசனைகளை வழங்கவில்லை.
திட்டங்களை அறிவிக்கவில்லை.
இப்படி, நாட்டில் தொடர்ந்து நீடிக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வு காணப்படவில்லை.
ஆனால்,
உலக அளவில் இருந்து வரும் பிரச்சினைகளுக்கு மட்டும் மோடி, அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
ஆலோசனைகளை வழங்குகிறார்.
சர்வதேச பிரதமராக இருக்கும் ஒருவர் எப்படி, இந்தியாவில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
என்ன செய்வது, நேரமில்லாத காரணத்தால்தான், இந்திய பிரச்சினைகளுக்கு மட்டும், பிரதமர் மோடியால் தீர்வு காண முடியவில்லை.
நேரமில்லாத பிரதமரை நாடு முதல்முறையாக பெற்று இருக்கிறது.
வாழ்க இந்திய ஜனநாயகம்...!
S.A.Abdul Azeez
Journalist.
No comments:
Post a Comment