" வாய் மூடி வேடிக்கை பார்க்கும் வினோதம்...!"
ஆம்,
பெங்களூருவில் ஏ,டி.எம். மையத்தில் வங்கி பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கி
மர்ம நபர் ஒருவர் பணத்தை கொள்ளையடித்து சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானபோது, என் மனம் மட்டுமல்ல, அதை பார்த்த நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோரின் மனங்களும் பதைத்து போயின..
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜோதி உதய். வங்கி பெண் அதிகாரியான இவர் மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், கதவை மூடி, ஜோதியை துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். மேலும் திடீரென ஜோதியின் தலையை அரிவாளால் வெட்டிய அந்த நபர், ஜோதியிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த வழியாக சென்றவர்கள் ஜோதி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.. மர்ம நபர் கொடூரமாக தாக்கியதால், ஜோதியின் மண்டை ஓட்டில் பிளவு ஏற்பட்டதால் அவரது உடலின் ஒருபக்கம் செயல் இழந்து விட்டது. எனினும் மருத்துவர்கள் ஜோதிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் தோறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோதி பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏ.டி.எம். மையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த காட்சியை செய்தியுடன் வெளியிட்டபோது, மக்கள் கொதித்து போனார்கள்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, கார்நாடகா மாநில அரசு, அம்மாநில போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம்தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்,, மர்ம நபரை தேடி வருகின்றனர். மர்ம நபர் விற்பனை செய்த செல்பேசியை வாங்கிய நபரை ஆந்திராவில் கைது செய்த போலீசார் அவரிடம் கொள்ளையன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரி, விஷயத்திற்கு வருவோம்...
பெண் அதிகாரி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இதுவரை எந்த மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை..
நாட்டின் சில பகுதிகளில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் சம்பவங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி முழக்கமிட்ட பெண் அமைப்புகள், சமூக அமைப்புகள், ஏனோ பெண் அதிகாரி கடுமையாக தாக்கப்பட்டபோது, அதற்கு எதிராக வீதிக்கு வரவில்லை...
சாதாராண கொள்ளையாக இதனை எடுத்துக் கொண்டனர்...
வாய் மூடி வேடிக்கை பாத்துக் கொண்டிருக்கின்றன சில சமூக அமைப்புகள்...
இதுதான் வேதனையான விஷயம்....
பெண் அதிகாரியை தாக்கிய அந்த கொள்ளையனை விரைவில் பிடிக்க வேண்டும்
போலீசார்....
அவனை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்த வேண்டும். பெண் அதிகாரி அனுபவித்த வேதனையை அந்த பாவி அனுபவிக்க வேண்டும்...
போலீசார் கொள்ளையனை அடித்து துன்புறுத்தும்போது, வழக்கம் போன்று சில மனித உரிமை அமைப்புகள் பொங்கி எழுந்தது எதிர்த்து குரல் கொடுக்கும்..
அதுகுறித்து போலீசார் கவலைப்பட கூடாது.
இந்த நேரத்தில் மறைந்த எழுத்தாளார் சுஜாதா எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது...
அந்த சிறுகதையில் போலீஸ் நிலையத்தில் கொள்ளையன் ஒருவனை போலீசார் அடிப்பதை கண்டித்து ஒருவர் குரல் கொடுப்பார். போலீஸ் அதிகாரி தரும் விளக்கத்தை, ஆரம்பத்தில் அந்த மனிதர் ஏற்க மறுத்தாலும் பின்னர், உண்மை நிலையை அறிந்து போலீசாரின் நடவடிக்கையில் நியாயம் இருப்பதாக உணர்ந்து கொள்வார். மனதை தொடும்படி இந்த சிறுகதை இருக்கும்...
சில கொள்ளையர்கள் மீது இரக்கம் காட்டவே கூடாது என்பதை உலகத்தில் நிகழும்
பல சம்பவங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன...
பெங்களூருவில் பெண் வங்கி அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திலும் இதே நிலையைதான் போலீசார் கடைப்பிடிக்க வேண்டும்...
மேலும் சென்னையில் மட்டும் 40 சதவீத ஏ.டி.எம். மையங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என தகவல் ஒன்று தெரிவிக்கிறது..
பல ஏ.டி.எம். மையங்களில் வயதான காவலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்..
சென்னையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே நிலைதான் உள்ளது. ஏ.டி.எம். மையங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இனியாது, நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்கள் பாதுகாப்பாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
கடைசியாக....
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் அதிகாரி விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...
நீங்களும் என்னுடன் இணைந்து பிரார்த்தனை செய்யுங்கள்...
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
===========================================
http://www.youtube.com/watch?v=Vr4fyYEytP8
No comments:
Post a Comment