தூங்காவனம்....!
போதைப் பொருட்களுக்காக கடத்திச் செல்லப்பட்ட தனது மகனை மீட்க கமல்ஹாசன் செய்யும் போராட்டம் என்ற ஒரு லைன் கதைதான் தூங்காவனம்.
இந்த ஒரு லைன் கதையை வைத்துக் கொண்டு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல முடியுமா என்றால், முடியும் என நிருபித்து இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா.
கமல்ஹாசனின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு அழகான வடிவம் கொடுத்து, படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தொய்வு இல்லாமல் கொண்டு செல்வது இயக்குநரின் திறமை என்றே கூறலாம்.
இரவு விடுதியில் நடக்கும் இந்த கதையில் அழகான தமது ஒளிப்பதிவின் மூலம், சானு வர்க்கீஸ் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.
ஜிப்ரான் இசை படத்திற்கு மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது எனலாம்.
எடிட்டர் ஷான் முகமது தமது திறமையை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம் படம் தொய்வு இல்லாமல் செல்கிறது.
பிரகாஷ் ராஜ் வழக்கமான வில்லன் தனத்தை இந்த படத்திலும் காண்பித்து இருக்கிறார்.
திரிஷா, ஆஷா சரத் உள்ளிட்டோரும் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள்.
இரவு விடுதியில் நடக்கும் படம் என்பதால், இளம் பெண்களின் கலாச்சார சீரழிவு, மது அருந்தும் காட்சிகள், ஆபாச நடனம் என படத்தில் காட்சிகள் நிறைய வந்து செல்கின்றன.
இது உண்மையிலேயே வருத்தும் அளிக்கிறது.
அதேநேரத்தில் உலக நாயகன் தமது நடிப்பு திறமையை இந்த படத்திலும் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் தூங்காவனம், கமல் படங்களில் மேலும் ஒரு மைல் கல் எனலாம்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment