Tuesday, May 13, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (80)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!" 

 நாள் - 80



இந்தியாவில் தொடர்ந்து மதுப் பழக்கம் அதிரிப்பு....!

உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்....!!

இந்தியாவில் மதுப்பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் மதுப் பழககத்திற்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

மதுவுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எவ்வளவுதான் பிரச்சாரம் செய்தாலும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்களின் எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மதுப் பழககம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

குடிப்பழக்கம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,  15 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

32 சதவீத ஆண்களும், 10.6 சதவீத பெண்களும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.



மதுப்பழக்கம் காரணமாக மட்டும், கடந்த 2012ஆம் ஆண்டு மட்டும் 3.3 மில்லியன் மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

அதேசமயம் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு 2.8 சதவீத பேரும், காசநோய்க்கு 1.7 சதவீதம் பேரும், கலவரங்கள் போன்ற சம்பவங்களில் 0.9 சதவீதம் பேரும் பலியானதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



சீனா, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் குடிப்பழக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

No comments: