"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"
நாள் - 82
குடிபோதையில் அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர் கைது...!
மது போதையில் மதுப்பிரியர்கள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஏன், சில நேரங்களில் அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நம்மில் பலருக்கு காமடியை வரவழைக்கும்...சிரிப்பை வரவைக்கும்..
ஒருசிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், மதுப்பிரியர்கள் சில நேரங்களில் நல்ல சிரிப்பு நடிகர்களாகவே செயல்படுவது பல சம்பவங்களின் மூலம் தெரியவருகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவம்தான் இப்போது நீங்கள் படிக்க போகிறீர்கள்...
ஆம்...
குடிபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர், அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பவம் அண்மையில் நடந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் குடிபோதையில் தனது பேருந்தை எடுப்பதற்கு பதிலாக அருகில் பயணிகள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை எடுத்துச் சென்றுவிட்டார்.
பேருந்து காணமல் போனதை அறிந்த அரசு பேருந்து ஓட்டுனர் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அரசு பேருந்தை தேடிவந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே அரசு பேருந்தை காவல்துறையினர் மீட்டனர்.
மேலும் போதை டிரைவரையும் கைது செய்தனர்.
பார்த்தீர்களாக நண்பர்களே, மது உள்ளே சென்றதும், மதி இழந்துவிடுகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம் அல்லவா...
இப்படி மதி இழந்து போதையில் தள்ளாட வேண்டிய அவசியம் மக்களுக்கு ஏன் ஏற்படுகிறது...
அது தேவைதானா.....
சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டால், நாட்டில் மதுப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் அல்லவா...
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================
No comments:
Post a Comment