"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!"
நாள் - 81
மதுவால் அந்த பழக்கத்திற்கு ஆளாகும் ஆண்களுக்கு மட்டும் பாதிப்புக்கு ஆளாகுவதில்லை. மாறாக அதிகளவு பெண்கள்தான் பாதிப்புக்குஆளாகிறார்கள்.
பல சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணங்களாக இருந்து வருகின்றன.
தற்போது மதுவுக்கு எதிராக பெண்களும் போராட முன்வந்துள்ளனர்.
துணிச்சலுடன் களத்தில் இறங்கியுள்ளன.
மதுவுக்கு எதிராக ஒரு பெண் துணிச்சலுடன் எடுத்த முடிவை அனைவரும் பாராட்டி உள்ளனர்.
சத்திஷ்கர் மாநிலத்தில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆம்...
மதுபோதையில் இருந்த மாப்பிள்ளையுடன் குடும்பம் நடத்த முடியாது என்று சத்திஷ்கர் மாநிலத்தில் மணப்பெண் ஒருவர் தனது திருமணத்தை அதிரடியாக நிறுத்தினார்.
சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டதில் இளம் பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருமணதிற்கான சங்ககுள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாப்பிள்ளை மது அருந்தி போதையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியைடந்த மணப்பெண் உடனடியாக திருமணத்தை நிறுத்தினார்.
குடிகாரரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த தனக்கு விருப்பம் இல்லை என்று திருமண மேடையில் கூறினார் அந்த பெண்.
இதனையடுத்து அங்கு திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் மற்றும் ஊர்காரர்கள் மனப்பெண்ணிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக மணப்பெண்ணின் தந்தை தொடர்ந்து குடித்ததால் பலியானதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
சத்திஷ்கர் பெண்ணின் துணிச்சலை பாராட்டுகிறேன்.
இதுபோன்ற துணிச்சலான முடிவுகளை தமிழக பெண்களும் எடுக்க வேண்டும்.
மதுவுக்குஅடிமையாகும் ஆண்களுக்கு நல்ல பாடத்தை கற்பிக்க வேண்டும்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment