Tuesday, September 9, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (93)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

 நாள் - 93

குடிப்பழக்கம் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது.....! 

பீகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி பேச்சு....

பீகார் மாநிலம் பாட்னா அருகே ரூபாஸ்பூரில் மகாதலித் மாநாடு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்று அம்மாநில முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி பேசினார்.

அப்போது, மக்கள் குடிப்பழக்கம் கொள்வது தப்பில்லை அதேநேரத்தில் அது அளவோடு இருந்தால் நல்லது என்றும் இரவு தூங்க போகும் முன்னர் ஒரு குவார்ட்டர் குடித்து விட்டு செல்வதால் தப்பு எதுவுமில்லை என்றார் அவர்.



தலித் மக்கள் குடியை நிறுத்த முடியவில்லை என்றால், கொஞ்சம் அளவோடு , மருந்தாக குடித்து கொள்ளுங்கள் என்று மஞ்சி யோசனை தெரிவித்தார்.

ஒரு மனிதன் வேலையை முடித்து விட்டு மாலையில் வீட்டுக்கு வந்ததும் நன்றாக சாப்பிட வேண்டும். பின்னர் ஒரு ப்புவா (குவார்ட்டர்) குடிக்கலாம். பின்னர் அவர்கள் தூங்க போகலாம். இதில் தவறு ஒன்றுமில்லை. இவ்வாறு செய்வதை தவறாக நான் கருதவில்லை என்றும் அவர் கூறினார்.

தனது தந்தை தன்னை பள்ளிக்கு அனுப்ப விரும்பியதாகவும், அப்போது தான் தனது தந்தையிடம், நீங்கள் குடிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால்தான், நான் பள்ளிக்கு செல்வேன். அப்போதுதான் நான் கல்வி அறிவு பெற்றவனாக வர முடியும் என்று கூறியதாகவும் மஞ்சி தெரிவித்தார்.



ஒருவர் குடிக்கு அடிமையாகும்போது, அவர்களின் குழந்தைகள் முன்னேற்றம் பாதிக்கும் என்றார் மஞ்சி. அத்துடன் குடிப்பவர்களின வாழ்க்கை தரம் உயராது என்று குறிப்பிட்ட பீகார் முதலமைச்சர், குடித்துதான் ஆக வேண்டுமென்றால் அளவோடு மருந்தாக குடியுங்கள் என்றும் யோசனை தெரிவித்தார்.

தனது 70 வயது ஆண்டு கால வாழ்க்கையில் தான் குடித்ததே இல்லை என்றும், இந்த சமூகத்தில் தலித் மக்கள் முன்னேற வேண்டுமானால் குடியை நிறுத்த வேண்டும் என்றும் ஜிதன்ராம் மஞ்சி கேட்டுக் கொண்டார்.

குடியை நிறுத்திவிட்டு தலித் மக்கள்கல்வி அறிவு பெற வேண்டும் என்றும், ஆண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெண் குழந்தைகளுக்கும், கல்வி அறிவை ஊட்ட வேண்டும் என்றும், பீகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி வலியுறுத்தினார்.

குடிக்கு அடிமையாகும் ஒருவரால் அவரது குடும்பம் பாதிப்பு அடையும், வாழ்க்கை தரம் உயராது.


ஜிதன்ராம் மஞ்சியின் வார்த்தைகளில் உண்மை உள்ளது.

அதேநேரத்தில் அளவோடு குடித்தால் தப்பு இல்லை என்ற அவரது வாதம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த கருத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆசை...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: