"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "
நாள் - 96
தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்...!கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி வலியுறுத்தல்.....!!
கேரளாவில் முழு மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
அதற்காக அங்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் அரசின் இந்த நல்ல திட்டத்திற்கு அம்மாநில மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள்..
குறிப்பாக பெண்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்...
இந்நிலையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் 30.09.2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி பங்கேற்று பேசினார்.
அப்போது, பெருந்தலைவர் காமராஜர் அரசியல் வானில் ‘கிங் மேக்கர்’ ஆக விளங்கியதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
உண்மையான, சிறந்த தலைவர் என்றும், அனைத்து தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குபவர் என்றும் உம்மன் சாண்டி கூறினார்.
கேரளா-தமிழகத்துக்கு இடையே நல்ல உறவை வளர்த்தவர் காமராஜர் என்று கூறிய அவர், பொதுவாழ்வில் எளிய வாழ்வை வாழ்ந்தவர் என்றும் பாராட்டு தெரிவித்தார்.
அரசியலுக்கு வருபவர்கள் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உம்மன் சாண்டி கேட்டுக் கொண்டார்.
அத்துடன் கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் மதுவிலக்கு குறித்தும் தமது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.
மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார் உம்மன் சாண்டி.
மேலும், தமிழகத்திலும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்.
கேரளவை போன்று அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தும் என்று நம்புவதாகவும் உம்மன் சாண்டி நம்பிக்கை தெரிவித்தார்.
கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்தியது மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உம்மன் சாண்டி வேண்டுகோள் விடுத்து இருப்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்று.
அவரது வேண்டுகோளை அதிமுக அரசு ஏற்று, தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதான், தமிழக மக்களின் ஆசை. எதிர்பார்ப்பு...
நல்ல நாள், விரைவில் மலரும் என நம்புவோம்...
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment