Friday, June 26, 2015

புதுமலர் இயக்குநர்....!

இயக்குநர்....!


வேலூரில் புதுமலர் மாத இதழை நடத்தியபோது எடுத்தப்படம் இது.

மறைந்த நண்பர் சீதாராமனுடன் இணைந்து கையெழுத்து பிரதியாக புதுமலரை ஆரம்பித்தேன்.

பின்னர் புதுமலர் அச்சில் வந்து வழக்கம் போல பல சிரமங்கள் இன்னல்களை சந்தித்து வெற்றிகரமாக வலம் வந்தது.

எனினும் புதுமலரை தொடர்ந்து எங்களால் நடத்த முடியாமல் போனது வருத்தம்தான்.

அதேநேரத்தில் ஊடகத்துறையில் தற்போது ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட புதுமலர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது எனலாம்.

மேலும் சில தோல்விகள் பல வெற்றிகளுக்கு நிச்சயம் உதவும் என்ற பாடம் தத்துவம் ஆகியவை புதுமலர் நடத்தியதன் மூலம் எனக்கு கிடைத்தது எனலாம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Wednesday, June 24, 2015

எலி....! - விமர்சனம்.

எலி....!


மார்க்கெட் சுத்தமாக இழந்த நடிகர் வடிவேலு மீண்டும் எப்படியாவது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் எலி.

தமிழ் திரைப்பட ரசிகர்களை இன்னும் கேனையர்களாகவே வடிவேலு நினைத்து விட்டார் போல தெரிகிறது.

தாம் எது செய்தாலும் எப்படி நடித்தாலும் அது வொர்க்கவுட் ஆகிவிடும் என்ற தப்பான நினைப்பில் அவர் செய்யும் காமெடிகள் சிரிப்பை அல்ல கடும் சலிப்பை ஏற்படுத்துகிறது.

அதுவும் நவீன யுகத்தில் பழைய பாணியில் எடுக்கப்பட்ட இந்த துப்பறியும் கதை ரசிகர்களை ஐய்யய்யோ என அலறி அடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு ஓட்டம் பிடிக்க வைக்கிறது.


வடிவேலு பாணியிலே சொல்ல வேண்டுமானால் எலி ஒரு டொம்மி பிஸ்.

எலி பார்க்க கொஞ்சமும் சகிக்கல.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Tuesday, June 23, 2015

காவல்....!

காவல்....!

புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர் வேலூர் மாலை முரசு நாளிதழின் முன்னாள் செய்தி ஆசிரியர் மசூத் அகமது.

மிகச் சிறந்த சுறுசுறுப்பான பத்திரிகையாளர்.

பத்திரிகை தர்மத்தின்படி, சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட்ட மனிதர்.

ஓய்வு பெற்று தற்போது சமூக பணிகளில் ஈடுபட்டிருக்கும் மசூத் அகமது, பத்திரிகை துறையில் ஊழல், சமூக சீர்கேடு ஆகியவற்றை எதிர்த்து போராடி எழுதியதுடன், சமூகத்தை காவல் காக்கும் மனிதராக இருந்தார் எனலாம்.

அவருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாவை.

சென்னையில் இருந்து வேலூர் சென்றால், நேரம் கிடைக்கும்போது மசூதை சந்தித்து பேசி வருவது என் வழக்கம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

நினைத்தாலே இனிக்கும்....!

நினைத்தாலே இனிக்கும்....!


டெல்லி வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகள் இவை.

மறைந்த நண்பர் சீதாராமனின் திருமணத்திற்கு முன் எடுத்தப்படம் இது.



உடன் நண்பர்கள் தீனதயாளன் சந்திரசேகர் ஆகியோருடன் நான்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Saturday, June 20, 2015

இனிமே இப்படித்தான்....!

இனிமே இப்படித்தான்....!

இப்படி சொல்லிக் கொண்டு நடிகர் சந்தானம் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தால், விரைவில் தமிழ் திரைப்பட உலகத்தில் இருந்து காணாமல் போவார்.

ஒரே மாதிரியான டைலாக்....

ஒரே மாதிரியான வசன உச்சரிப்பு...

ஒரே மாதிரியான பாடி லங்வேஜ்...

என எத்தனை படங்களில்தான் நடிகர் சந்தானத்தை இதேபோன்று பார்ப்பது.

ரசிகர்களுக்கு கடுமையாக சலிப்பு தட்டுகிறது.

இனிமே இப்படித்தான்....

திரைப்படம் எப்படி என கேட்டால் நெம்பர் ஒன் அறுவை எனத்தான் சொல்ல வேண்டும்.

இதைத் தவிர இனிமே இப்படித்தான் படத்தைப் பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Thursday, June 18, 2015

எல்லோரும் கொண்டாடுவோம்...!

எல்லோரும் கொண்டாடுவோம்...!


இந்தியாவில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியது.

வழக்கமான உற்சாகத்துடன் இறையச்சத்துடன் நோன்பு வைக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எமது ரமலான் நல்வாழ்த்துகள்.

இந்த இனிய நேரத்தில் ஒரு மலரும் நினைவு.

இங்குள்ள புகைப்படத்தில் என்னுடன் இருப்பது மறைந்த என் நண்பர் சீதாராமன்.

ஒவ்வொரு ரமலானின்போது என்னுடைய வீட்டிற்கு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி அடைந்த நல்ல பண்பாளர்.

இந்து பிராமணர் குடும்பத்தில் பிறந்தாலும் மத இன வேறுபாடுகளை தூக்கி எரிந்து மனிதநேயப் பண்புகளுடன் பழகிய மனிதர்.


பன்முகத் தன்மை கொண்ட அந்த நல்ல இதயத்துடன் பழகிய நாட்கள் என்றும் மறக்க முடியாது.

நண்பர் சீதாராமனை போன்று நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நல்வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதுடன் மகிழ்ச்சியுடன் ரமலானை கொண்டாடுவோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Wednesday, June 17, 2015

நினைவுகள்....!

விவசாயி....!


வேலூரில் நண்பர்களுடன் இணைந்து வேலூர் யூத் ஃபோரம் என்ற சமூக நல அமைப்பை நடத்தினோம்.

அமைப்பின் சார்பில் ஏலகிரிக்கு சென்று சமூக பணிககளில் ஈடுபட்டோம்.

அப்போது விவசாய பணிகளில் இறங்கியபோது எடுத்தப்படம் இது.

அடியேன் விவசாயியாக மாறி பணிகள் செய்தது மறக்க முடியாத அனுபவம்.


விவசாயி கெட்டெப் நமக்கு நன்கு பொருத்தமாக உள்ளதா ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Tuesday, June 16, 2015

அன்புக்கு நான் அடிமை....!

அன்புக்கு நான் அடிமை....!


டெல்லியில் வசித்தபோது எடுத்த புகைப்படம் இது.

டெல்லி வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று.

பணி நிமித்தம் காரணமாக நண்பர்கள் வி.சி.ராஜா டாக்டர் பாஸ்கரன் ஆகிய இரண்டு பேரும் வேலூரில் இருந்து டெல்லிக்கு வந்திருந்தார்கள்.

அப்போது மறக்காமல் எங்களைத் தொடர் கொண்டு நாங்கள் இருந்த பிரேம் நகருக்கு இருவரும் வந்தனர்.

வேலூர் நண்பர்களை கண்டு நாங்கள் ஆனந்தம் அடைந்தோம்.

மகிழ்ச்சியில் இருவருக்கும் அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்கு பிறகு புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.

அந்த மகிழ்ச்சியின் நினைவுதான் இந்த புகைப்படம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Sunday, June 14, 2015

அமெரிக்காவுக்கு எதிராகஆவேசம்

அமெரிக்காவுக்கு எதிராகஆவேசம்

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து அமெரிக்க இயக்குநர் எடுத்த திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.

அதுதொடர்பான செய்தித்தொகுப்பை ஜி தொலைக்காட்சியில் (G Tv)  ஒளிபரப்பப்பட்டது.

அதனை எழுதிய இயக்கியது இந்த அடியேன்தான்.

அதுதொடர்பான வீடியோ Youtubeல் பதிவு செய்துள்ளேன்.

Muslim Organisation protest against America in Chennai - s.a.abdul azeez  (1)

Muslim Organisation protest against America in Chennai - s.a.abdul azeez  (2)

என்ற தொடர்பை பயன்படுத்தி அதனை நீங்கள் காணலாம்.

கருத்துக்களை தெரிவிக்கலாம்.

எஸ்.ஏ.அப்துல்அஜீஸ்
பத்திரிகையாளர்.

நோன்பின் மாண்புகள்...!

நோன்பின் மாண்புகள்...!

ரமலான் நோன்பு குறித்து மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான என்னுடைய குறும்படம் Youtube-ல் பதிவு செய்துள்ளேன்.

Ramalan fasting 1 - s.a.abdul azeez

Ramalan fasting 2 - s.a.abdul azeez

என்ற தொடர்பை பயன்படுத்தி அதனை நீங்கள் காணலாம்.

உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Saturday, June 13, 2015

புனித ரமலான்.....!

"மனித நேய பண்புகளை புனிதமாக்கும் ரமலான்"


இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

புனித ரமலான் மாதம் குறித்து நான் எழுதி இயக்கிய "மனித நேய பண்புகளை புனிதமாக்கும் ரமலான்" என்ற குறும்படம் அல்லது ஆவணப்படம் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், நான் ஜி தொலைக்காட்சியில் (G Tv) பணிபுரிந்தபோது ஒளிப்பரப்பாகி நேயர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றது.



அதன் வீடியோ தொகுப்பை தற்போது Youtubeயில் பதிவு செய்துள்ளேன்.

இந்த பதிவை இஸ்லாமிய சகோரர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு சகோதர சகோதரிகளும் பார்த்து கருத்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வீடியோவை பார்க்க கீழ்க்கண்ட

https://youtu.be/HsJS_4co214
https://youtu.be/7F49wdHAHaU

என்ற தொடர்பை பயன்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Friday, June 12, 2015

உலக அற்புதம்...!

தாஜ்மஹால்...!


உலக அதிசயங்களில் ஒன்று.

ஒவ்வொரு முறையும் அதை நேரில் பார்க்கும்போது நான் வியப்பு அடைவது உண்டு.

எந்த ஒரு வசதியும் இல்லாத அந்த காலத்தில் உலகமே வியக்கும் வகையில் வியப்பூட்டும் ஒரு அற்புதமான கட்டிடத்தை எழுப்பிய அந்த கட்டிடக்கலை நிபுணரின் திறமையை கண்டு ஆச்சரியம் அடைந்தது உண்டு.


டெல்லியில் வசித்தபோது பல முறை ஆக்ராவுக்கு பயணித்து தாஜ்மஹாலின் அழகை அற்புதத்தை அதிசயத்தை கண்டு அதில் மயங்கி போனதுண்டு.

நவீன கால கட்டிட கலைக்கு சவால் விடும் இந்த அற்புதமான கலை கட்டிடத்தை அனைவரும் அவசியம் காண வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.


உலகமே வியக்கும் தாஜ்மஹால் மற்றும் அதன் வளாகப் பகுதிகள் மத்திய மாநில அரசுகளால் சரியாக பராமரிக்கவில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கும் செய்தியாகும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Thursday, June 11, 2015

படிக்காதவன்...!

படிக்காதவன்...!


கல்வியில் அதிக ஆர்வமும் அக்கறையும் இல்லாத வழக்கமான முஸ்லிம் சமுதாயத்தில் எங்கள் குடும்பமும் விதிவிலக்காக இருக்கவில்லை.

கல்வியில் அக்கறை இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் எப்படியோ படித்து விட்டு முதுகலை பட்டம் பெற்றேன்.

எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி.

இந்த சந்தோஷம் கவுரவம் எனக்கு கிடைக்க என் மூத்த சகோதர்கள் செய்த தியாகங்கள் ஏராளம்.

என் சகோதரர்களின் வேர்வை துளிகள் மூலம்தான் நான் உயர்கல்வி பெற முடிந்தது.

குடும்பத்தில் முதல் பட்டதாரியாக நான் மலர்ந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்ததோ இல்லையோ என் சகோதரர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


இதேபோல் என் தாய் என் மூத்த சகோதரி இளைய சகோதரி ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள் என்னை பாராட்டி மகிழ்ந்தனர்.

என் கல்வி வளர்ச்சிக்கு அவர்களும் மறைமுகமாக செய்த உதவிகள் என்றும் மறக்க முடியாதவை.

பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் எடுத்த இந்த புகைப்படத்தை காணும் போது அந்த பின்னணியில் என் குடும்ப உறுப்பினர்கள் செய்த தியாகங்களை என்றும் நினைத்து நான் ஆனந்த கண்ணீரால் மகிழ்ச்சி அடைவது உண்டு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

மகா நடிகன்....!

மகா நடிகன்....!

ராஜ் தொலைக்காட்சியின் நல் முத்துக்களில் ஒருவர் அன்பு.

சிறந்த படத்தொகுப்பாளர்.

அத்துடன் கலைத்துறையில் ஆர்வம் உள்ள நல்ல கலைஞர்.

மகா நடிகர்.

அவருக்கு இன்று திருமண நாள்.

இந்த இனிய தருணத்தில் அன்புவின் ஆசைகள் இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.

விரைவில் தமிழ் திரைப்பட துறையில் அன்பு சாதிக்க வாழ்த்துகிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Wednesday, June 10, 2015

மலரும் நினைவுகள்...!

மூன்று முகம்...!


ஸ்டைல் ஸ்டைலுதான்...!

சூப்பர் ஸ்டைலுதான்..!!

என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.

டெல்லியில் நண்பர்கள் தீனதயாளன் சந்திரசேகர் ஆகியோருடன் இணைந்து ஸ்டைலுடன் எடுத்தப்படம் இது.


டெல்லி வாழ்க்கையின் மறக்க முடியாத நாட்கள் இவை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Tuesday, June 9, 2015

மலரும் நினைவுகள்...!

குச் குச் ஹோதா ஹை....!


டெல்லி வாழ்க்கையின் நாட்களை என்றும் மறக்க முடியாது.

அந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

காஷ்மீரில் புகழ் பெற்ற தொப்பியை அணிந்து கொண்டு குச் குச் ஹோதா ஹை ஷாருக்கான் ஸ்டைலில் ஒரு போஸ் அவ்வளவுதான்.



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

கேப்டன் பிரபாகரன்...!

கேப்டன் பிரபாகரன்...!


கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வருவதற்கு முன்பு எடுத்தப் புகைப்படம் இது.

படத்தில் நின்றுக் கொண்டிருக்கும் நண்பர்தான் பிரபாகரன்.

என்னுடைய கல்லூரி தோழர்.

கல்லூரிக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக செல்வோம்.

குறிப்பிட்ட ஒரு பாயிண்ட்டில் அனைவரும் ஓன்று கூடி பின்னர் இருசக்கர வாகனத்தில் பயணிப்போம்.

மிதிவண்டியில் கல்லூரிக்கு செல்லும் சுகமே தனிதான்.

மறக்க முடியாத அனுபவம் அது.

இந்த பயணத்திற்கு பிரபாகரன்தான் கேப்டன்.

தற்போது சென்னையில் வசிக்கும் பிரபாகரனுடன் தொடர் கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவரைப் பற்றிய தகவல்கள் இருந்தால் நண்பர்கள் அறிந்தால் எனக்கு தெரிவிக்கலாம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

ஆர்வ கோளாறால் ஆபத்து...!

ஆர்வ கோளாறால் ஆபத்து...!

முகநூலில் சில இஸ்லாமிய நண்பர்கள் பக்கத்திற்கு பக்கம் இறைவேதம் திருகுரானின் வசனங்களை பதிவு செய்கிறார்கள்.

மேலும் நபி மொழியும் அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

நண்பர்களின் ஆர்வத்தை இஸ்லாமிய உணர்வை நிச்சயம் பாராட்டிதான் ஆக வேண்டும்.

ஆனால் ஒரு விஷயத்தை முஸ்லிம் நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முகநூல் புனிதமான இடங்களில் மட்டும் பார்க்கப்படுவதில்லை.

வாசிக்கப்படுவதில்லை.

அலுவலகம் பேருந்து சாலைகள் பாத்ரூம் என பல்வேறு இடங்களில் முகநூல் கையாளப்படுகிறது.

இப்படிப்பட்ட இடங்களில் குரானின் வசனங்கள் படிப்பது நபி மொழியை வாசிப்பது எனக்கு சரியாக படவில்லை.


இது குரானின் கண்ணியத்தை குறைக்கும் செயலாகவே தோன்றுகிறது.

முகநூலில் இருக்கும் நண்பர்கள் பெரும்பாலோர் ஓரளவுக்கு படித்தவர்கள்தான்.

அவர்கள் அனைவரும் குரானுடன் நாள்தோறும் தொடர்பு வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாற்று மத தோழர்களுக்கு இஸ்லாமிய செய்தியை கூற பல வழிகள் உண்டு.

முகநூலில் கூட இஸ்லாமிய செய்தியை குறிப்பிட்ட அளவுக்குதான் நாம் பயன்படுத்த வேண்டும்.

பக்கத்திற்கு பக்கம் வலுக்கட்டாயமாக செய்திகளை பதிவு செய்தால் அதை யாரும் படிக்க மாட்டார்கள்.

கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இதை இஸ்லாமிய நண்பர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாள் ஒன்றுக்கு ஒரு வசனம் ஒரு நபி மொழி என்ற அளவில் இருந்தால் அது அனைத்து உள்ளங்களில் எளிதாக பதியும்.

குரான் நபி மொழி விவகாரத்தில் இஸ்லாமிய முகநூல் நண்பர்கள் இனி கவனத்துடன் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

காக்கா முட்டை...!

காக்கா முட்டை...!


சென்னை சேரி சிறுவர்களின் வாழ்க்கையை அழகிய கவிதையாக வடித்துள்ளார் இயக்குநர் எம்.மணிகண்டன்.

படத்தில் நடித்துள்ள இரண்டு சிறுவர்களும் உண்மையில் நடிக்கவில்லை. வாழ்ந்து இருக்கிறார்கள்.

ஒரு சாதாரண பீட்சாவை (pizza) வைத்துக் கொண்டு இவ்வளவு சுவையாக படத்தை தர முடியுமா என்பது ஆச்சரியம்தான்.

ஆனால் மனம் தைரியம் சமூக அக்கறை கொஞ்சம் இருந்தால் தரமான படத்தை இயக்க முடியும் தர முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் இயக்குநர் மணிகண்டன் நிருபித்து சாதித்துள்ளார்.



படத்தில் குத்தாட்டம் கிடையாது.

மது அருந்தும் காட்சிகள் கிடையாது.

சென்னை சேரிகளில் குடியும் கும்மாளம்தான் இருக்கும் என பல திரைபடங்களில் நாம் பார்த்து இருக்கிறோம்.

ஆனால் இந்த படத்தில் அதற்கு நேர்மாறாக சேரி மக்களின் வாழ்க்கை அழகிய கவிதையாக செதுக்கப்பட்டுள்ளது.


சென்னை மொழியில் வரும் பாடல்கள் அனைத்தும் படத்துடன் சேர்த்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைக்கின்றன.

சிறுவர்களின் தாயாக நடித்துள்ள பெண்மணியும் பாட்டியாக வருபவரும் படத்தோடு வாழ்ந்து இருக்கிறார்கள்.

இருவரும் நடிப்பதாகவே தெரியவில்லை.

கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்கள் எனலாம்.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.

படத்தின் இறுதி காட்சியில் பீட்சா சாப்பிடும் சிறுவர்கள் இரண்டு பேரும் அதன் சுவை பிடிக்காமல் முகத்தை சுளித்துக் கொண்டு பாட்டி சுட்டுத்தந்த பீட்சா தோசையே மேல் என கூறுவது செம டச்சிங்.

படத்தில் நம்ம ஊடக சகோதர சகோதரிகள் வந்து செல்வது காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் நல்ல தரமான திரைப்படம் வந்திருக்கிறது.


குடும்பத்தில் உள்ள அனைவரும் தைரியமாக இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

காக்கா முட்டை காண கிடைக்காத அரிய முட்டை.

நல்ல சத்துக்கள் (கருத்துக்கள்) நிறைந்த முட்டை.

ரசிகர்கள் அவசியம் சுவைக்க வேண்டிய முட்டை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Sunday, June 7, 2015

சலங்கை ஒலி....!

சலங்கை ஒலி....!


மறக்க முடியாத கல்லூரி நாட்கள்.

அந்த நாட்களில் பல துறைகளில் கலைகளில் மனம் ஆர்வம் கொண்டது.

நடிகர் கமல்ஹாசனின் ரசிகன் என்பதால் அவரது நடிப்பு நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நாமும் ஏன் நடனத்தை கற்றுக் கொள்ளக் கூடாது என மனம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது.

இறுதியில் ஒருவழியாக பரதநாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

அதை அரங்கேற்றம் செய்தீர்களா என்ற கேள்விகளையெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது.



ஆனால் நடனம் ஓரளவுக்கு தெரியும்.

நாட்டியம் கற்றுக் கொண்டபோது எடுத்தப் புகைப்படம் இது.

வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள்.

மீண்டும் அசைப்போடுகிறது மனம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

விந்தை....!

மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர உங்களுக்கு ஆசையா...!

சென்னை கீழ்ப்பாக்கம் அல்லது வேலூர் பாகாயம் மனநல மருத்துவமனைகளில் (மெண்டல் ஆஸ்பத்திரி) ஏதாவது ஒன்றில் சேர உங்களுக்கு ஆசையா..?

அதுவும் ரொம்ப அவசரமாக சேர விருப்பமா...?

கவலையை விடுங்க.

உடனடியாக விந்தை என்கிற தமிழ் திரைப்படத்தைப் போய் பாருங்கள்.

நிச்சயமாக நீங்கள் மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிடுவீர்கள்.

உங்களுடைய விரோதிகள் அல்லது உங்கள் நலம் விரும்பாதவர்களை பழி வாங்க நீங்கள் துடிக்கிறீர்களா..?

அல்லது உங்கள் மனம் துடிக்கிறதா...?

விந்தை படம் சூப்பரோ சூப்பர் என சொல்லி அவர்களை படம் பார்க்க அனுப்பி வையுங்கள்.


அது போதும்.

உங்கள் விரோதிகள் ஒழிந்து போவார்கள்.

.............................(மையின்ட் வாய்ஸ்)

படமா எடுத்து இருக்கிறார்கள்.
.............................(மீண்டும் மையின்ட் வாய்ஸ்)

சர்வதேச அளவில் உலக சினிமா உச்சத்தில் சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்ப தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இன்னும் தங்களை திருத்திக் கொள்வதாக தெரியவில்லை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Saturday, June 6, 2015

மலரும் நினைவுகள்...!

இளமை எனும் பூங்காற்று...!




எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

கள்ளப்படம்....!

கள்ளப்படம்....!


திரைப்படத்துறையில் உதவி இயக்குநர்கள் சந்திக்கும் சவால்கள், பிரச்சினைகள், அவமானங்கள் ஆகியவற்றை எடுத்துக்கூறும் வகையில் இந்த படம்  அமைந்து இருக்கிறது.

இயக்குநர் ஜே.வடிவேல் படத்தில் மது அருந்தும் காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்து இருப்பது பாராட்டத்தக்கது.

இதேபோன்று குத்தாட்டம், இரட்டை அர்த்த வசனங்கள் படத்தில் இல்லாமல் இருப்பது ஆறுதல் அளிக்கிறது.

அதேநேரத்தில், தயாரிப்பாளரின் வீட்டில் கொள்ளையடித்து, திரைப்படத்தை தயாரித்து வெற்றி பெறுவதாக கூறும் லாஜிக் கொஞ்சம் இடிக்கவே செய்கிறது.

ஏராளமான கற்பனைகளுடன், எதிர்கால கனவுகளுடன் சென்னை கோடம்பாக்கம் ஏரியாவில் சுற்றித்திரியும் உதவி இயக்குநர்கள் எப்படி வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள், தோல்வி அடைகிறார்கள் என்பதை இப்படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கள்ளப்படம் ஆபாசம் இல்லாத, கலப்படம் இல்லாத சுமாரான திரைப்படம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Friday, June 5, 2015

பாபநாசம்...!

பாபநாசம்...!


கல்லூரி நண்பர் மோகனின் தாய் தந்தையுடன் நான்.




கேரளத்தைச் சேர்ந்த இவர்கள் என் மீது நல்ல அன்புடன் பழகினர்.

இருவரும் தற்போது உயிருடன் இல்லை.

எனினும் இவர்களுடன் பழகிய நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Thursday, June 4, 2015

கண்ணோடு காண்பதெல்லாம்..!

கண்ணோடு காண்பதெல்லாம்..!


சமூக அக்கறையுடன் வேலூரில் ஏழை எளிய மக்களுக்காக கண் சிகிச்சை முகாம் நடத்திய போது எடுத்தப் புகைப்படம் இது.

இந்த படத்தில் இருக்கும் மறைந்த இப்ராஹீம் பாய் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்.

இன்று ஊடகத்துறையில் நான் ஏதோ குப்பை கொட்டிக் கொண்டு இருப்பதற்கு இப்ராஹீம் பாயும் ஒரு மறைமுக காரணம் எனலாம்.

எங்கள் சகோதரர்கள் நடத்திய நிறுவனத்தில் நாள்தோறும் தினமணி நாளிதழ் வாங்குவது வழக்கம்.
அந்த நாளிதழை இவர்தான் வாங்கி வருவார்.

வாங்கி வருவது மட்டுமல்லாமல் தினமணியின் ஒவ்வொரு பக்கத்தையும் அனைத்து செய்திகளையும் படித்துவிட்டுதான் மற்றவர்ககளுக்கு படிக்க நாளிதழை தருவார்.

பள்ளி நாட்களில் சினிமா செய்திகளை படிக்க எனக்கு ஆர்வம் அதிகம்.

எனவே தினமணியை உடனே பார்க்க மனம் துடிக்கும்.

ஆனால் இப்ராஹீம் பாயோ பேப்பர் தராமல் கால தாமதம் செய்யும்போது அவர் மீது கோபம் கோபமாக ஆத்திரம் வரும்.


ஆனால் ஒரு நாளிதழை எப்படி படிக்க வேண்டும்.

எந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இதையெல்லாம் இவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.

இவையெல்லாம் பின் காலத்தில் எனக்கு உதவும் என அப்போது நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

ஆக என்னுடைய ஊடகத்துறையின் வெற்றிக்கு இப்ராஹீம் பாயும் ஒரு மறைமுக காரணம் என்பதால் அவரை நான் என்றும் நன்றியுடன் நினைத்துக் கொள்வது உண்டு.

இப்ராஹீம் பாயின் மறுமைக்காக ஏக இறைவனிடம் பிரார்த்தனை துஆ செய்வது உண்டு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

குரு - சிஷ்யன்...!

குரு - சிஷ்யன்...!


மெஹபூப் பேகம்.

நண்பர் ரீகா நசீர் அகமத்தின் தாயார்.

கல்லூரி நாட்களில் நசீரின் வீட்டிற்கு செல்லும்போது அவரது தாயார் மெஹபூப் பேகம் என்னை மகிழ்ச்சியுன் வரவேற்று அன்பைப் பொழிந்து பாசத்தை வெளிப்படுத்தினார்.



அந்த அன்பையும் பாசத்தையும் வாழ்க்கையில் எப்படி மறக்க முடியும்.

மெஹபூப் பேகம் நல்ல கலகலப்பான பெண்மணி மட்டுமல்லாமல் சதுரங்கம் விளையாட்டில் கில்லாடியாக இருந்தார்.

ஓய்வு நேரங்களில் எனக்கு சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களை சொல்லி தந்தார்.

அவர் கற்றுத் தந்த நுணுக்கங்களை பயன்படுத்தி வேலூர் யூத் ஃபோரம் என்ற இளைஞர் அமைப்பு நடத்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினேன்.



அந்த மகிழ்ச்சியில் குரு மெஹபூப் பேகத்துடன் சிஷ்யன் அடியேன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இவை.

மெஹபூப் பேகம் மறைந்தாலும் அவர் என் மீது காட்டிய அன்பான உபசரிப்புகள் கூறிய ஆலோசனைகள் அறிவுரைகள் என்னை விட்டு மறையவில்லை.

என்னுடைய வாழ்க்கையில் அவை எனக்கு பலன் அளித்து வருகின்றன.

என் இறுதி காலம் வரை அந்த அன்பான அன்னையை நான் மறக்க முடியாது.

மறக்கவும் கூடாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Wednesday, June 3, 2015

மாஸ்....!

மாஸ்....!

பேய் படங்களின் வரிசையில் வந்திருக்கும் பக்கா மசாலா படம்.

இயக்குநர் வெங்கட் பிரபு மிரட்டுவார் என எதிர்பார்த்தால் பேய்களை வைத்து காமடி செய்துள்ளார்.

கதாநாயகன் சூர்யா பேய்களின் கூட்டத்துடன் சுற்றுவதும் அவர்களுடன் பேசி காமடி செய்வதும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

படத்தில் பின்னணி இசையில் கலக்கி இருக்கும் யுவன் சங்கர் ராஜா பாடல்களில் கோட்டை விட்டுள்ளார்.

ஒரு பாடல் கூட மனதில் ரிங்காரம் போடவில்லை.


இதுபோன்ற கதைகளைக் கொண்ட படங்களை நடிகர் சூர்யா இனி தவிர்த்து கொள்வது நல்லது.

இல்லையெனில் தொடர் தோல்விகளை தவிர்க்க முடியாமல் போகலாம்.

மொத்தத்தில் மாஸ் ஒரு டம்மி பீஸ்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

வேலையில்லா பட்டதாரி...!

வேலையில்லா பட்டதாரி...!

என் மூத்த சகோதரர் அப்துல் கரீமின் இளவல் முகமது சுஹைல் அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் கடந்த மாதம் நிறைவு செய்தார்.

தேர்வு முடிவுகள் நன்றாக அமைந்து அவர் தேர்ச்சியும் பெற்றுவிட்டார்.

உயர்கல்வியை நிறைவாக முடித்த Mohammed Suhailக்கு சிறிய அன்பளிப்பை அளித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தேன்.

முகமது சுஹைலுக்கு இனி வாழ்க்கையில் நல்ல வெற்றிகள் கிட்டி ஆனந்தம் தழைக்க வாழ்த்துக்கள்.

அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

துஆ கேட்கிறேன்.



முகமது சுஹைலுக்கு வேலை வாய்ப்பு மற்றும் அது தொடர்பான ஆலோசனைகளை நண்பர்கள் அளித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Tuesday, June 2, 2015

நீதிக்கு களங்கம்....!

நீதியை காக்க புறப்பட்ட கர்நாடக அரசு....!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கில் நீதி துறையின் தவறை திருத்திக் கொள்ளவே அப்பீல்.

ஜெ.வுக்கு தண்டனை என்பது கர்நாடக அரசின் நோக்கம் அல்ல.

நீதி துறை பல தர்ம சங்கடமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என்பதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இப்படி, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்து இருக்கும் கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.

நீதியை காப்பற்ற வேண்டும் என்பதுதான் கர்நாடகாவின் முக்கிய நோக்கம் என்பதை நாம் பாராட்டிதான் ஆக வேண்டும்.

ஆனால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசு நீதியை காப்பாற்றி இருக்கிறதா. நிலைநாட்டி இருக்கிறதா.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் மதித்து நடந்ததா.

காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி, உத்தரவின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் அளித்து நீதியை கர்நாடகம் நிலைநாட்டி இருக்கிறதா.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறிதும் மதிக்காமல் நடந்து கொண்டது மட்டுமல்லாமல், தமிழகத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கர்நாடகம் இழைத்து நீதிக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.
இப்படி பல விவகாரங்களில் கர்நாடக அரசு நீதியை நிலைநாட்டவில்லை.

நீதிக்கு எதிராகதான் செயல்பட்டது. செயல்பட்டு வருகிறது.

ஆனால், ஜெயலலிதாவின் வழக்கில் மட்டும் நீதியை காப்பற்ற, நீதிதுறையின் தவறை திருத்திக் கொள்ள மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்தான், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய முன்வந்து இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மிகவும் வலுவான தலைவராக இருக்கும் ஜெயலலிதாவை எப்படியும் அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமே கர்நாடகாவின் காரணமாக இருக்கிறது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் மற்ற தலைவர்களை விட கர்நாடகாவிற்கு எதிராக ஜெயலலிதா மிகவும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.

கர்நாடகாவிற்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்து வருகிறார்.

எனவேதான், எப்படியும் ஜெயலலிதாவின் வலிமையை குறைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் கர்நாடக அரசு முடிவு செய்து, அதற்கு சொத்து வழக்கை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

கர்நாடகாவில் வழக்கை நடத்த வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.

வழக்கு நடந்து தீர்ப்பு வந்துவிட்டது.

அத்துடன் கர்நாடகாவின் வேலை முடிந்து விட்டது.

இதுதான் சரியான நாகரீகம்.

ஆனால், தமிழகத்தில் ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக வீழ்த்த முடியாத தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படியாவது அவரை சொத்து வழக்கில் மீண்டும் சிக்க வைத்து லாபம் அடைய வேண்டும் என துடிப்பது போன்று கர்நாடக அரசும் இப்போது இறங்கியுள்ளது எனலாம்.

காவிரி விவகாரத்தில் நீதியை கர்நாடகம் நிலைநாட்டி இருந்தால் உண்மையில் நமக்கு நம்பிக்கை வரும்.

ஆனால் கர்நாடகம் அப்படி செய்யவில்லை.

இப்போது மட்டும் ஜெயலலிதா வழக்கில் நீதியை காப்பாற்ற புறப்பட்டு விட்டது.

இதுதான் கர்நாடக அரசு நீதியை காப்பாற்றும் அழகு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.