ஆர்வ கோளாறால் ஆபத்து...!
முகநூலில் சில இஸ்லாமிய நண்பர்கள் பக்கத்திற்கு பக்கம் இறைவேதம் திருகுரானின் வசனங்களை பதிவு செய்கிறார்கள்.மேலும் நபி மொழியும் அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நண்பர்களின் ஆர்வத்தை இஸ்லாமிய உணர்வை நிச்சயம் பாராட்டிதான் ஆக வேண்டும்.
ஆனால் ஒரு விஷயத்தை முஸ்லிம் நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முகநூல் புனிதமான இடங்களில் மட்டும் பார்க்கப்படுவதில்லை.
வாசிக்கப்படுவதில்லை.
அலுவலகம் பேருந்து சாலைகள் பாத்ரூம் என பல்வேறு இடங்களில் முகநூல் கையாளப்படுகிறது.
இப்படிப்பட்ட இடங்களில் குரானின் வசனங்கள் படிப்பது நபி மொழியை வாசிப்பது எனக்கு சரியாக படவில்லை.
இது குரானின் கண்ணியத்தை குறைக்கும் செயலாகவே தோன்றுகிறது.
முகநூலில் இருக்கும் நண்பர்கள் பெரும்பாலோர் ஓரளவுக்கு படித்தவர்கள்தான்.
அவர்கள் அனைவரும் குரானுடன் நாள்தோறும் தொடர்பு வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மாற்று மத தோழர்களுக்கு இஸ்லாமிய செய்தியை கூற பல வழிகள் உண்டு.
முகநூலில் கூட இஸ்லாமிய செய்தியை குறிப்பிட்ட அளவுக்குதான் நாம் பயன்படுத்த வேண்டும்.
பக்கத்திற்கு பக்கம் வலுக்கட்டாயமாக செய்திகளை பதிவு செய்தால் அதை யாரும் படிக்க மாட்டார்கள்.
கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
இதை இஸ்லாமிய நண்பர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாள் ஒன்றுக்கு ஒரு வசனம் ஒரு நபி மொழி என்ற அளவில் இருந்தால் அது அனைத்து உள்ளங்களில் எளிதாக பதியும்.
குரான் நபி மொழி விவகாரத்தில் இஸ்லாமிய முகநூல் நண்பர்கள் இனி கவனத்துடன் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment