கண்ணோடு காண்பதெல்லாம்..!
சமூக அக்கறையுடன் வேலூரில் ஏழை எளிய மக்களுக்காக கண் சிகிச்சை முகாம் நடத்திய போது எடுத்தப் புகைப்படம் இது.
இந்த படத்தில் இருக்கும் மறைந்த இப்ராஹீம் பாய் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்.
இன்று ஊடகத்துறையில் நான் ஏதோ குப்பை கொட்டிக் கொண்டு இருப்பதற்கு இப்ராஹீம் பாயும் ஒரு மறைமுக காரணம் எனலாம்.
எங்கள் சகோதரர்கள் நடத்திய நிறுவனத்தில் நாள்தோறும் தினமணி நாளிதழ் வாங்குவது வழக்கம்.
அந்த நாளிதழை இவர்தான் வாங்கி வருவார்.
வாங்கி வருவது மட்டுமல்லாமல் தினமணியின் ஒவ்வொரு பக்கத்தையும் அனைத்து செய்திகளையும் படித்துவிட்டுதான் மற்றவர்ககளுக்கு படிக்க நாளிதழை தருவார்.
பள்ளி நாட்களில் சினிமா செய்திகளை படிக்க எனக்கு ஆர்வம் அதிகம்.
எனவே தினமணியை உடனே பார்க்க மனம் துடிக்கும்.
ஆனால் இப்ராஹீம் பாயோ பேப்பர் தராமல் கால தாமதம் செய்யும்போது அவர் மீது கோபம் கோபமாக ஆத்திரம் வரும்.
ஆனால் ஒரு நாளிதழை எப்படி படிக்க வேண்டும்.
எந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இதையெல்லாம் இவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.
இவையெல்லாம் பின் காலத்தில் எனக்கு உதவும் என அப்போது நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
ஆக என்னுடைய ஊடகத்துறையின் வெற்றிக்கு இப்ராஹீம் பாயும் ஒரு மறைமுக காரணம் என்பதால் அவரை நான் என்றும் நன்றியுடன் நினைத்துக் கொள்வது உண்டு.
இப்ராஹீம் பாயின் மறுமைக்காக ஏக இறைவனிடம் பிரார்த்தனை துஆ செய்வது உண்டு.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment