பாமகவின் துணிச்சலை, தைரியத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும்.....!
மாற்றம்
முன்னேற்றம்
அன்புமணி
புதியதோர்
தமிழகம்
செய்வோம்....
என்ற முழக்கத்துடன்
வரும் 2016ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உண்மையில் பாமகவின் இந்த துணிச்சலை தைரியத்தை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படும்.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழில் கொள்கை உருவாக்கப்படும்.
பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்து சட்டம்.
தமிழகத்தில் அனைவரும்க்கும் தரமான சுகாதார வசதி.
இலவசங்களுக்கு ஏங்கும் பிச்சை எடுக்கும் முறை மாற்றப்படும்.
தமிழகத்தில் தற்போதைய கல்விமுறையை மாற்றி தரமான கல்வியை கொடுக்கப்படும்.
திராவிடக் கட்சிகள் தேர்தலில் கொண்டு வரபட்ட தேர்தல் பார்முலா ஒழிக்கப்படும்.
தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சிக்கு முடிவுகட்டப்படும்.
தமிழகத்தில் லோக்அயுக்தா கொண்டுவரப்படும்.
மக்கள் வரிபணத்தில் நல்லதொரு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
திராவிட கட்சிகளால் இலக்கு வைத்து நடத்தும் ஒரே நிறுவனம் டாஸ்மாக் என்ற நிலை மாற்றப்படும்.
தமிழகத்திற்கு திராவிட கட்சிகள் செய்த சாதனை 7000டாஸ்மாக் கடைகள்தான். இதனை மாற்றுவோம்.
ஐநா வில் வேட்டி அணிந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த கட்சி பாமக.
இளைஞர்கள் படிக்க வேண்டுமா, குடிக்க வேண்டுமா முடிவு செய்யுங்கள்
தமிழகத்தை முன்னேற்ற ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள்
திராவிட கட்சியின் ஊழல் ஆட்சியை முடிவுக்கட்டுங்கள்,
தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க அனைவருக்கும் கட்டாய கல்வி கிடைக்க ஆதரிப்பீர்.
தமிழக இளைஞர்கள் மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க ஆதரிப்பீர்
திராவிட கட்சிகளின் மக்களை இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றும் இலவச கலாச்சாரத்தை ஒழிக்க ஆதரிப்பீர்
தமிழகத்தில் செயல்படும் மத்திய தொழிற்சாலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஆதரிப்பீர்
மதுவை கொடுத்து 4 வயதை சிறுவர்களை குடிகாரர்களாக மாற்றியவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற ஆதரிப்பீர்
மது,ஊழல் இல்லா தமிழகம் காண ஆதரிப்பீர்
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக ஆதரிப்பீர்
தமிழகத்தில் நடைபெறும் கல்வி கொள்ளையை தடுக்க ஆதரிப்பீர்
அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க ஆதரிப்பீர்
அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க ஆதரிப்பீர்
இது மாற்றத்திற்கான நேரம்.
முன்னேற்றத்திற்கான நேரம்
இப்படி முழக்கங்களை மக்கள் முன்வைத்துள்ளது பாமக.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க திமுக முயற்சி செய்து வரும் நிலையில், தைரியமாக முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணி ராமதாசை பாமக அறிவித்துள்ளது.
அத்துடன், இது மாற்றத்திற்கான நேரம் என்றும், முன்னேற்றத்திற்கான நேரம் என்றும் முழக்கங்களை பாமக முன் வைத்துள்ளது.
பாமகவின் இந்த முழக்கங்களை, கோரிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பது தேர்தல் நெருங்க, நெருங்க தெரிந்துவிடும்.
மேலும் தேர்தலில் மக்கள் நிச்சயம் தெளிவான முடிவை அறிவித்து விடுவார்கள்.
ஒன்று மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நம் அனைவருக்கும் கனவு காணும் உரிமை உண்டு.
ஆனால், அந்த கனவு நிறைவேறுமா,...இல்லையா என்பது நிச்சயம் யாருக்கும் தெரியாது.
பாமகவின் அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு கருத்து வேறுபாடுகள் நிறைய இருந்தாலும்,
தமிழகத்தின் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்த விரும்பும் அன்புமணி ராமதாசுக்கு நமது பாராட்டுகள்.
இனி, எதிர்காலம்தான், அன்புமணி ராமதாசின் முதலமைச்சர் கனவிற்கு விடை அளிக்கும்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்
No comments:
Post a Comment