Wednesday, July 20, 2016

அப்பாடா.....!

அப்பாடா.....!


காவிரி நதிநீர் பிரச்சினை தீர்ந்துவிட்டது.

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடகா அரசு ஒப்புக் கொண்டுவிட்டது.

காவிரி நதிநீர் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்துவிட்டன.

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில்லை என கர்நாடக அரசு முடிவு.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முடிவை கைவிட்டது கேரள அரசு.

முல்லைப் பெரியாறு அணையை உயர்த்திக் கொள்ளும் தமிழக அரசின் முடிவுக்கு தடை செய்வதில்லை என கேரளா முடிவு.

பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை கைவிட்டது ஆந்திர அரசு.

தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை கடற்படை, இனி மீனவர்களை தாக்குவதில்லை என்றும், இலங்கை கடல்பகுதியில் எங்கு வேண்டுமானாலும், தமிழக மீனவர்கள் மீன் பிடித்துச் செல்லலாம் என அறிவித்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு மாநிலத்தில் மதுவிலக்கு உடனே அமலுக்கு வந்துவிட்டது.

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும், திட்டத்தை கைவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இனி மக்கள் நலப்பணியில் மட்டுமே முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.

நாட்டின் பணவீக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டது. இதனால், அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

நாடு முழுவதும், வறட்சியால் விவசாயிகள் தற்கொலைகள்  செய்து கொள்வது நின்றுவிட்டன.

வேலையில்லா திண்டாட்டம் முடிவுக்கு வந்து, படித்து வேலையில்லாமல் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை கிடைத்துவிட்டது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்,  கொடுமைகள் நின்றுவிட்டன.

நாடு முழுவதும் ரயில்கள் குறித்து நேரத்தில் இயங்குகின்றன.

அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன.

நோயாளிகளுக்கு மருத்துவர்கள்  சிரித்துக் கொண்டே நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள்.

நாடு முழுவதும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் விட்டது.

நாட்டில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எதுவும் இல்லை.

நாட்டில் கொலை, கொள்ளை, வன்முறை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது.

அத்துடன், உலகம் முழுவதும் நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள் நின்றுவிட்டன.

இதனால், ஐ.நா.அவைக்கு சமரச பணிகளில் ஈடுபடும் வேலை போய்விட்டது.

என்ன ஆச்சரியமாக உள்ளதா...

ஆம்,

கபாலி திரைப்படம் நாளை (22.07.2016) ரிலீஸ்.

இனி,

நாடு (இந்தியா) சுவிட்சமாக இருக்கும்.

நாட்டில் வெறும் முன்னேற்றம் மட்டும்தான்.

வளர்ச்சியோ வளர்ச்சிதான்.

உலகத்தில் அமைதியோ அமைதிதான்.

இனி எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே.

போங்கடா....

நீங்களும் உங்கள் திரைப்பட மோகமும்...

திரைப்படங்களை, திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம்.

கனவில் மூழ்கி, வாழ்க்கையை தொலைக்கும் மர மண்டைகளே புரிந்துக் கொள்ளுங்கள்.

வேண்டாம், வீணான திரைப்பட மோகம்.

S.A.Abdul Azeez
Journalist.

No comments: