ஏன் இந்த வெறுப்பு....?
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால்,
ஒருசில தோழர்களுக்கு உண்மையை ஏற்றுக்கொள்ள ஏனோ இன்னும் மனம் மறுக்கிறது.
கொலையாளி ஒரு முஸ்லீமாக இருக்க வேண்டும் என நினைத்த அவர்களுக்கு ராம்குமார் கைது செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை.
ராம்குமார் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
அவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு மாறிவிட்டார்.
அவர் பெயர் அப்துல்லா என்றெல்லாம் தற்போது கதை விட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இதன்மூலம் ஒன்று மட்டும் உறுதியாக புரிகிறது.
இஸ்லாத்தின் மீதும் முஸ்லீம்கள் மீதும் சிலருக்கு இருக்கும் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி இன்னமும் குறையவில்லை.
மாறாக அதிகமாக, கூடிக்கொண்டே போகிறது.
இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான மார்க்கம் அல்ல.
அது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.
ஓர் இறைக் கொள்கையை வலுவாக போதிக்கும் இஸ்லாம் உலக மக்கள் அனைவரையும் நன்மையின் பக்கம் வருமாறு அழைக்கிறது.
மனிதர்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது.
இம்மை, மறுமை வாழ்க்கையில் மனித சமுதாயம் ஆனந்தமாக இருக்க கருணை மிக்க இறைவன் திருக்குர்ஆனில் வழிகளை காட்டி இருக்கிறான்.
ஏக இறைவேதமான திருக்குர்ஆன் படித்தால் இந்த உண்மை மிகத் தெளிவாக புரியும்.
இதன்மூலம் இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் சிலருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி மறையும்.
கொலையாளி யாராக இருந்தாலும் அவனை மதம், சாதி ரீதியாக பார்க்காமல், அணுகாமல், குற்றவாளி என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க வேண்டும் தோழர்களே.
கடைசியாக,
நீங்கள் எந்த மதக் கொள்கையை கடைப்பிடித்தாலும் சரி, அது உங்கள் விருப்பம்.
ஏனென்றால் திருக்குர்ஆன் அழகாக சொல்லிவிட்டது.
உங்களுக்கு உங்கள் மார்க்கம்.
எங்களுக்கு எங்கள் மார்க்கம்.
மேலும் தவறான வழியில் இருந்து நேர்வழி தெளிவாக எடுத்து கூறப்பட்டு விட்டது.
இனி எல்லாமே மனிதனின் கையில் தான் இருக்கிறது.
மேலும்
நன்மையின் கூலி நன்மையை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.
எனவே
இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் இருக்கும் தவறான கருத்துக்களை மனதில் இருந்து அகற்றி விட்டு அன்பை விதையுங்கள் தோழர்களே.
அதன்மூலம் மனிதர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கம் மிக ஆழமாக வளரும்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment