கனவு நகரம்....!
சென்னை மாநகரம், தற்போது வட இந்திய இளைஞர்களின் கனவு நகரமாக மாறி வருகிறது.
மாறிவிட்டது.
சென்னையின் எந்த பக்கம் திரும்பினாலும், இந்தி கலந்த தமிழ் மொழியை பேசும் வட இந்திய இளைஞர்களை, மக்களை காண முடிகிறது.
உணவகங்களில் வேலை செய்யும் பத்து பேரில் 8 பேர் வட இந்திய இளைஞர்கள்.
மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும்போது, வட இந்திய இளைஞர்களைதான் அதிகம் பார்க்க முடிகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் வட மாநில மக்களின் கூட்டம்தான் அதிகம்.
சினிமா தியேட்டர்களில், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்தான் டிக்கெட் வாங்க அதிகமாக வரிசையில் நிற்கிறார்கள்.
கட்டிட தொழிலாளிகளில் வட இந்திய மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.
சின்ன சின்ன தொழில்களை கூட கவுரவம் பார்க்காமல் செய்யும் வட இந்திய இளைஞர்களை சென்னையில் அதிகமாக பார்க்க முடிகிறது.
ஏன்,
பிச்சை எடுக்கும் தொழிலை செய்யும் பலரில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
ஒருசில கொள்ளை சம்பவங்களிலும் வட இந்திய இளைஞர்கள் இருப்பது செய்தி ஊடகங்கள் தரும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
சரி,
நம்ம ஆளுங்க என்ன செய்கிறார்கள்.
அதுதான் இருக்கிறதே, அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்.
அதில், கூட்டம் கூட்டமாக மொய்கிறார்கள் தமிழர்கள்.
வேலை செய்யும் ஆர்வம் சிறிதும் இல்லை தமிழர்களுக்கு.
பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பற்ற மனம் இல்லை தமிழர்களுக்கு.
சம்பாதிக்கும் பணத்தைக்கூட, மது அருந்தி, செலவழிக்கதான் தமிழர்களின் புத்தி செல்கிறது.
அத்துடன்,
கபாலி, கபாலி என சினிமா பின்னாடி ஓடுகிறான்.
நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறான்.
முதல்நாள் முதல் ஷோ பார்த்து அதை படம் எடுத்து முகநூலில் போட்டு மகிழ்ச்சி அடைகிறான்.
ஏதோ உலகத்தில் மிகப்பெரிய சாதனை செய்துவிட்டதாக நினைத்து பூரிப்பு அடைகிறான்.
இதே நிலை தொடர்ந்தால்,
சென்னை மட்டுமல்ல, தமிழகவே இனி வட இந்திய இளைஞர்களின், மக்களின் கனவு நகரமாக விரைவில் மாறி விடும்.
S.A.Abdul Azeez
Journalist.
No comments:
Post a Comment