சுல்தான்.....!
மல்யுத்த விளையாட்டை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த இந்தி திரைப்படம், சுமார் 3 மணி நேரம் சலிப்பு (போர் அடிக்காமல்) தட்டாமல் செல்வது ஆச்சரியம் அளிக்கிறது.
படத்தில் வன்முறை காட்சிகள் இல்லை.
மது அருந்தும் காட்சிகள் இல்லை.
அபாச நடனங்கள் இல்லை.
பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் இல்லை.
இருந்தும் சுல்தான் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபர், தமது அழகான, நேர்த்தியான திரைக்கதை மற்றும் வசனங்களால், படத்தை ரசிகர்களை கவரவே செய்திருக்கிறார்.
பல இடங்களில் வசனங்கள் டச்சிங் ரகம்.
மல்யுத்த வீரராக வரும் நடிகர் சல்மான் கான், தமது நடிப்பால் உண்மையிலேயே கலக்கி இருக்கிறார்.
இதேபோன்று, மல்யுத்த வீராங்கனையாக வரும் அனுஷ்கா ஷர்மாவின் நடிப்பும் ரசிகர்களை கவரவே செய்கிறது.
அரியானா மாநிலத்தை ஒட்டியே கதை நகர்வதால், அங்குள்ள இந்தி மொழிக்கு ஏற்ப வசன உச்சரிப்புகள் இருப்பது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.
விஷால் சேகரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.
ரன்தீப் ஹுடா, அமித் சத் ஆகியோரும் தங்களது நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள்.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள சுல்தான் திரைப்படம், வசூலில் சக்கைப்போடு போட்டு வருவதற்கு,, அதன், அழகான நேர்த்தியான கதை மற்றும் திரைக்கதையே முக்கிய காரணம் எனலாம்.
மொத்தத்தில் விளையாட்டை மையமாக எடுக்கப்பட்டுள்ள சுல்தான், ரசிகர்களை ஏமாற்றவில்லை.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment