Saturday, July 30, 2016

மகத்தான பணி....!

முதல்வன் விருது....! மகத்தான பணி....!!



ஆண்டுதோறும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவியர்களுக்கு முதல்வன் விருதுகளை வழங்கி, ராஜ் தொலைக்காட்சி கவுரவித்து வருகிறது.

அதன்படி, 18வது ஆண்டாக முதல்வன் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இதற்காக சென்னைக்கு 3 நாட்களுக்கு முன்பு அழைத்துவரப்பட்ட மாணவ மாணவிகள், ஆளுநர் ரோசய்யாவுடன் சந்திப்பு, போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை, பிர்லா கோளரங்கத்திற்கு பயணம், வி.ஜி.பி. தங்கக் கடற்கரையில் உல்லாசப் பொழுதுபோக்கு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

அத்துடன் முதல்வன் விருது பெறும் மாணவர்களுக்காக ராஜ் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிறப்பு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

பின்னர், விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு முதல்வன் விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவில், முன்னாள் டி.ஜி.பி. ராஜகோபால், கனரா வங்கியின் துணை பொது மேலாளர் தங்கவேலு, விஜிபி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ரவிதாஸ், அமிர்தா கல்வி நிறுவன தலைமை செயல் அதிகாரி பூமிநாதன், திரைப்பட இயக்குநர் மிஸ்கின், நடிகர் ஜெயம் ரவி, நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பள்ளி தேர்வுகளில் சாதிக்கும் மாணவர்களுக்கு ராஜ் தொலைக்காட்சி நிறுவனம், விருதுகளை வழங்கி  தொடர்ந்து கவுரவித்து வருவது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஓர் மகத்தான பணி என்றே கூறலாம்.

விருதுகளை மட்டும் வழங்காமல், மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்கிளுக்கும் ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்வது, மாணவர் சமுதாயம் மீதும், நாட்டின் கல்வி வளர்ச்சி மீது ராஜ் தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கு இயக்கும் அக்கறையை பாராட்ட வேண்டும்.

அவர்களது சமூக அக்கறையை எவ்வளவு பாராட்டினால் அது குறைவுதான்.

சாதிக்கும் மாணவர்களை மேலும் சாதிக்க ஆர்வம் தூண்டும் இதுபோன்று விழாக்களை பிற தொலைக்காட்சிகள் நடத்துவதாக எனக்கு தெரியவில்லை.

எனவே, மகத்தான பணியை 18 ஆண்டுகளாக தொடர்ந்து ஆற்றி வரும் ராஜ் தொலைக்காட்சிக்கு ஒரு சலூட்.....!

வாழ்க ராஜ் தொலைக்காட்சி நிர்வாகிகள்....!

S.A.Abdul Azeez
Journalist.

No comments: