Tuesday, October 20, 2015

கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்.....!

கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்.....!


கடனுடன் பகை.

பொதுவாக உணவு விடுதிகள் டீ கடைகளில் இப்படி ஒரு வாசகத்துடன் கூடிய பதாகை தொடங்குவதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம்.

கடன் அன்பை முறிக்கும் என பெரியவர்கள் சொல்வார்கள்.

எனக்கு கடன் வாங்கும் பழக்கம் இல்லை.

அப்படியே வாங்கினாலும் குறிப்பிட்ட காலகெடுவிற்கு முன்பே கடன் பணத்தை அதை கொடுத்தவர்களிடம் திருப்பி கொடுத்து விடுவேன்.

யாராவது கடன் கொடுத்து உதவ முன்வந்தால் கண்ணியத்துடன் வாங்க மறுத்து விடுவேன்.

ஆனால் கடன் விஷயத்தில் எனக்கு பல அனுபவங்கள் உண்டு.

ஒருமுறை நண்பர் ஒருவர் ஒரு அவசர தேவைக்காக மிகப் பெரிய தொகையை கடனாக கேட்டிருந்தார்.

நானும் கொடுத்தேன்.

அதனை பல மாதங்களுக்கு பிறகுதான் என்னால் திருப்பி வாங்க முடிந்தது.

மீண்டும் அதே நபர் கடன் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை.

அதனால் இல்லை என்றேன்.

நண்பருக்கு கோபம் வந்துவிட்டது.

என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் குறைத்துக் கொண்டார்.

இதேபோல் உறவினர் ஒருவருக்கு கடன் கொடுத்து இருந்தேன்.

பல ஆண்டுகள் ஆகியும் என்னால் முழு பணத்தை இன்னும் வாங்க முடியவில்லை.

கடனாக வாங்கி பணத்தை கூட முழுமையாக கொடுக்காமல் அவ்வப்போது கை செலவுக்கு செலவழிக்கும் வகையில்தான் உறவினர் பணத்தை திருப்பி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இதனால் இரண்டு பேர் இடையே உறவு முறையில் லேசான விரிசல் ஏற்பட்டு விட்டது.

ஆக கடன் கொடுத்தாலும் தொல்லை.

கொடுக்காமல் இருந்தாலும் பாதிப்பு.

கடன் விவகாரம் மனிதனை எப்படி ஆட்டிப் புரட்டுகிறது என்பதை அதை கொடுத்தும் கொடுக்காமல் இருந்தவர்களுக்கு தெரியும்.

அந்த அனுபவம் எனக்கு கொஞ்சம் அதிகமாக உண்டு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: