Tuesday, October 13, 2015

எதிர்பார்ப்பு.....!

எதிர்பார்ப்பு.....!


யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

அப்படி ஒரு எதிர்பார்ப்பு எண்ணம் உங்களிடம் இருந்தால் அது உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தை தான் கொண்டு வந்து தரும்.

மனிதனுக்கு அவன் மூலமாகவே அனைத்து காரியங்களும் நடக்கும் வகையில் இயற்கை பல விதிகளை ஏற்படுத்தி உள்ளது.

எனவே உங்கள் மீதும் இயற்கையின் மீதும் நம்பிக்கை வைத்து பணிகளை செய்யுங்கள்.

நீங்கள் நினைப்பது நடக்கும்.

அதை விட்டுவிட்டு ஒவ்வொரு காரியத்திற்கும் நண்பர்கள் உறவினர்கள் உதவ முன் வருவார்கள் என நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

குறிப்பாக மீடியா துறையில் இருப்பவர்கள் யாரையும் உடனே நம்பி விடக்கூடாது.

அப்படி நம்பி எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டால் அவ்வளவுதான்.

அது பிறகு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தோல்விகளை அள்ளித் தரும்.

(இது என் அனுபவம்)

அதேநேரத்தில் வாழ்க்கையில் சில பணிகள் மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஆனால் இங்கேயும் எதிர்பார்ப்புகளை நாம் குறைவாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஏமாற்றம் ஏற்படாது.

உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல நிகழ்வுகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

அவை அனைத்திற்கும் நீங்களே காரணமாக இருந்திருப்பீர்கள்.

பிறரின் உதவிகள் இல்லாமலேயே சில வெற்றிகள் உங்களை வந்து அடைந்து இருக்கும்.

ஆக எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு ஏமாற்றங்களை தவிர்ப்போம்.

அதை விட்டுவிட்டு எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் நிச்சயம் நிம்மதி இருக்காது.

வருத்தமே மிஞ்சும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: