கண்கள் குளமானது....!
இயக்குநர் தங்கர் பச்சான் எழுதி இயக்கிய இரண்டு திரைப்படங்களை சமீபத்தில் பார்த்தபோது என்னையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது.
ஒன்று மனித உறவுகளை மையமாக வைத்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஒன்பது ரூபா நோட்டு திரைப்படம். அதை பார்த்தபோது இயக்குநர் தங்கர் பச்சானின் சமூக உணர்வு மற்றும் அக்கறையை உணர முடிந்தது.
இதேபோன்று மற்றொரு திரைப்படம் அழகி.
மனித வாழ்வில் முதல் காதலை யாராலும் எப்போதும் மறக்க முடியாது.
திருமணம் செய்துக் கொண்ட பிறகு கூட முதல் காதலின் நினைவுகள் அடிக்கடி நம்மை பாடாய் படுத்தும்.
நமது தூக்கத்தை கெடுக்கும்.
அதுவும் நாம் விரும்பியவர்கள் துன்பத்தில் ஏழ்மையில் தவிக்கும் போது நம்மால் நிச்சயமாக நிம்மதியாக அமைதியாக இருக்கவே முடியாது.
இதைத்தான் மிக அற்புதமான தனது கற்பனை மூலம் மண்ணின் கலாச்சாரம் பண்பாடு குறையாமல் அழகி படத்தில் கொண்டு வந்து நிறுத்தி பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கி விட்டார் தங்கர் பச்சான்.
இரண்டு திரைப்படங்களும் ஏற்கனவே வந்த பழைய படங்கள்தான்.
ஆனால் இவற்றை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.
அற்புதமான கலைப் படைப்பை தந்த இயக்குநர் தங்கர் பச்சானை கட்டித் தழுவி முத்தம் கொடுத்து பாராட்ட மனம் துடிக்கிறது.
தமது அற்புதமான படைப்புகள் மூலம் கண்களை குளமாக்கி எனது மனதை லேசாக்கிய தங்கர் பச்சானுக்கு பாராட்டுகள்.
நன்றிகள்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment