அப்படி நினைக்க வேண்டாம்...!
கடின உழைப்பிற்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும் வெற்றியை கண்டு பிறர் பொறாமை கொள்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம்.
குறிப்பாக உங்களது நெருங்கிய உறவினர்கள் உங்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமை கொள்வதாக நீங்களே தவறாக கற்பனை செய்துக் கொள்ள வேண்டாம்.
ஒருவரது முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை காணும் போது அதுபோல நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைப்பது எண்ணுவது மனித இயல்பு.
அதை நாம் பொறாமை என நினைத்து நம் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரை எப்போதும் சந்தேக கண்ணோடு நோக்குவது சரியல்ல.
இதுபோன்ற செயல்களால் உறவுகள் சிதைக்கப்பட்டு பகை உணர்வு ஏற்படுகிறது.
பல தொல்லைகளுக்கு நாம் தவறாக எண்ணும் எண்ணங்களே காரணமாக அமைந்து விடுகின்றன.
அதேநேரத்தில் பல தீய சக்திகள் உண்மையாகவே பொறாமை கொண்டு நம் வளர்ச்சியை முன்னேற்றத்தை குழித் தோண்டி புதைக்க நினைக்கும் போது அத்தகைய தீய சக்திகளிடமிருந்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடக்கூடாது.
இல்லையெனில் பல தோல்விகள் நம் வாழ்வில் தொடர்கதையாக தொடரும் நிலை உருவாகும்.
இது என் அனுபவம்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment