மதுவால் சீரழிந்து வரும் தமிழகம்.....!
மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் நக்மா கவலை.....!!
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, குடிநீர், மின் பற்றாக்குறை என மோசமான நிலை உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை.
குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.
ஒருபக்கம் இலவசங்களை கொடுக்கும் தமிழக அரசு, மறுபக்கம் மது விற்பனை செய்கிறது.
மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது.
புள்ளிவிவரங்களின்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகமாக உள்ளனர்.
இதற்கு மதுவே காரணம்.
இவற்றையெல்லாம் ஒரு பெண்ணாக முதலமைச்சர் ஜெயலலிதா புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், தலித்களுக்கு எதிரான வன்முறை நாடெங்கும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஹரியாணாவில் 2 தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற கொடுமைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.
சென்னையில் நேற்று (22.10.2015( செய்தியாளர்களிடம் பேசியபோதுதான் நக்மா இந்த கருத்தை தெரிவித்தார்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment