பிரசங்கம் எல்லாம் பிறருக்குதான்...!
வேலூரில் சாதிக் பாய் என்ற வணிகர் ஒருவர் இருக்கிறார்.
என் மூத்த சகோதரரின் நண்பர் அவர்.
அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள்.
சாதிக் பாய் பழகுவதற்கு நல்ல மனிதர்.
ஏதாவது ஒரு விஷயம் பேசினால் குர்ஆன் நபி மொழி ஆகியவற்றில் இருந்து மேற்கோள் காட்டி பேசுவார்.
ஏழை பெண்கள் குறித்து நிறைய பேசுவார்.
திருமணம் ஆகாத ஏழை பெண்களுக்கு படித்த இளைஞர்கள் வாழ்வு கொடுக்க முன்வர வேண்டும் என்பார்.
திருமணங்கள் எளிமையாக நடத்த வேண்டும் என மனதை கவரும் வகையில் பிரசங்கம் செய்வார்.
ஏழை பெண்களின் திருமணத்தில் பெரிதும் அக்கறை கொண்ட சாதிக் பாய் தம்முடைய ஆண் பிள்ளைகளில் யாருக்காவது ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தாரா என்றால் பதில் இல்லை என்றே கிடைக்கும்.
எளிய திருமணங்களை ஆதரிக்கும் சாதிக் பாய் தம் குடும்ப திருமணங்களை எளிமையாக நடத்தினாரா என்றால் அதற்கும் பதில் இல்லைதான்.
எல்லாமே தடால் புடால் திருமணங்கள்தான்.
சாதிக் பாயை நான் குறை சொல்லவில்லை.
பிறகுக்கு அட்வைஸ் செய்யும் நபர்கள் சமூக சுழல்களில் சிக்கி அதை தங்களுடைய வாழ்வில் கடைப்பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இதுதான் இன்றைய யதார்த்தம்.
இதனால்தான் நல்ல விஷயங்கள் குறித்து பிறருக்கு அட்வைஸ் செய்துவிட்டு வாழ்க்கையில் பலர் நிம்மதி அடைகின்றனர்.
சாதிக் பாயை போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் சிலரை சந்தித்து இருப்பீர்கள்.
உண்மை தானே.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment