Wednesday, May 20, 2015

36 வயதினிலே...!

36 வயதினிலே...!

ஜோதிகா மீண்டும் திரை உலகில் மறு பிரவேசம் செய்து சிறப்பாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம்தான் இது.

புகைப் பிடிக்கும் காட்சிகள்

மது அருந்தும் காட்சிகள்

இளம் பெண்களுடன் கடலை போடும் காட்சிகள்

கட்டிப் பிடித்து காதல் கன்றாவி செய்யும் காட்சிகள்

கற்பனைக்கு எட்டாத சண்டை காட்சிகள்

காமடி என்ற பெயரில் அறுவை ஜோக்குகள்

இப்படி இருந்தால்தான் ஒரு திரைப்படம் ரசிகர்களைக் கவரும் என நினைத்து சமூக சிந்தனை இல்லாமல் திரைப்படம் எடுக்கும் முட்டாள் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மத்தியில் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் அழகான கதையை கையில் எடுத்துக் கொண்டு குடும்பத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் முகம் சுளிக்காமல் தைரியமாக பார்க்கும் வகையில் இந்த படத்தை எடுத்து இருப்பது பாராட்டத்தக்க ஒன்று.


இந்த படத்தில் குத்தாட்டம் கிடையாது.

மது அருந்தும் காட்சிகள் கிடையாது.

புகைப் பிடிக்கும் காட்சிகள் கிடையாது.

மச்சி சொச்சி ஃபிகர் போன்ற வசனங்கள் கிடையாது.

ஆனால் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜோதிகா படத்தில் வாழ்ந்து இருக்கிறார்.


பெண்களை போற்றும் வகையில் அனைத்து காட்சிகளும் இருக்கின்றன.

பெண்கள் மனசு வைத்தால் சாதிக்க முடியும் என்பதை இந்த படம் பெண்களுக்கு பாடம் சொல்கிறது.

நகைச்சுவையுடன் காட்சிகள் நகர்வதால் படத்துடன் ரசிகர்கள் ஒன்றி விடுகிறார்கள் எனலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கருத்துள்ள திரைப்படம் தமிழ் திரை உலகில் வந்துள்ளது எனலாம்.

படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவிற்கு பாராட்டுகள்.

36 வயதினிலே படத்தை வாடி ராஜாத்தி வா என வரவேற்பு அனைவரும் தைரியமாக பார்க்கலாம்.

குறிப்பாக பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: