ஒரு தீர்ப்பு...! பல விமர்சனங்கள்...!!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று (11.05.2015) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள அதிமுகவினர் நீதி வென்றது என கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் நீதி இல்லை நிதி வென்று விட்டதாக சிலர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
சட்டம் ஒரு இருட்டறை. அறிஞர் அண்ணா அன்றே சொன்னார் என சிலர் கூறியுள்ளனர்.
அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது நீதி வென்று விட்டதாக கருத்து தெரிவித்த சிலர் இப்போது ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் நீதி இல்லை நிதி வென்று விட்டதாக கூறுகிறார்கள்.
ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக சந்திக்க துணிவு இல்லாதவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் அவர் விடுதலை ஆவதை சிறிதும் விரும்பவில்லை.
தற்போது ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டதால் தங்களுடைய அரசியல் கனவுகள் தவிடு பொடியாக போனதால் தீர்ப்பு குறித்து தாறுமாறாக விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்த தீர்ப்பு மூன்று மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டதாக ஒருவர் பதிவு செய்துள்ளார்.
நீதிபதி குமாரசாமிக்கு பெட்டிகள் பல சென்று விட்டதாக ஒருவர் பதிவு செய்துள்ளார்.
தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் அதற்கு மகிழ்ச்சியுடன் ஒரு விளக்கம்.
பாதகமாக வந்தால் நீதி செத்து விட்டது. நிதி வென்று விட்டது என அழுகை குரல் எழுப்புவது.
இது எந்த வகையில் நியாயம் ?
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment