ஏமாற்றம்....!
தமிழக முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஜெயலலிதாவிடம் தமிழக மக்கள் ஓர் அறிவிப்பை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.ஆம். டாஸ்மாக் போதையில் தள்ளாடும் தமிழகத்தை ஜெயலலிதா தம்முடைய அறிவிப்பின் மூலம் காப்பாற்றுவார் என தமிழக பெண்கள் நம்பிக்கை வைத்தனர்.
ஆனால் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு நேற்று (24.05.15) தலைமைச் செயலகத்திற்கு சென்ற ஜெயலலிதா ஐந்து புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்து போட்டார்.
ஆனால் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிபடியாக நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடவில்லை.
இது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
குறிப்பாக தாய்க்குலம் வேதனை அடைந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
காரணம். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் தைரியம் துணிச்சல் ஜெயலலிதாவிடம் மட்டுமே உண்டு என தமிழக மக்கள் இன்னும் நம்புகிறார்கள்.
எனவே மதுவிலக்கு குறித்து முதலமைச்சர் வாய் எதுவும் திறக்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர் எனலாம்.
அதேநேரத்தில் இன்னும் மக்கள் நம்பிக்கை இழந்து விடவில்லை.
மதுவிலக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிட்டு போதையில் தள்ளாட்டம் போடும் தமிழகத்தை நிச்சயம் காப்பாற்றுவார் என்று மக்கள் குறிப்பாக பெண்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா காப்பாற்ற வேண்டும்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்
No comments:
Post a Comment