என்ன கொடுமைடா....!
சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது...!!இந்த திரைப்படம் எப்போ ரிலீஸ் ஆச்சு....!!
எப்போ தியேட்டர்ஸை விட்டு போச்சு என தெரியாது....!!!
ஆனால் அண்மையில் வெளியான இந்த திரைப்படத்தை இன்று பார்க்க கூடிய வாய்ப்பு கிட்டியது.
காட்சிக்கு காட்சி புகைப்பிடித்தல் மது அருந்துதல் இளம் பெண்களுடன் கடலை போடுதல் சீசனுக்கு சீன் செல்பேசியில் பேசுதல் போன்ற காட்சிகளை தவிர படத்தில் வேறு எதுவும் இல்லை.
திரைப்பட உதவி இயக்குநர்கள் பற்றிய கதை என்றாலும் அவர்கள் அனைவரும் நல்ல மனிதர்கள் இல்லை என்ற கருத்தைதான் இயக்குநர் பதிவு செய்ய முயல்கிறார்.
சினிமாவில் நல்லவர்கள் ஜெயித்தவர்கள் என நிறைய பேர் உள்ளனர் என்பதை இயக்குநர் சொல்லவில்லை.
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று தலைப்பு வைத்து விட்டு இளைஞர்களே சென்னைக்கு வராதீர்கள் என மறைமுகமாக சொல்கிறார் இயக்குநர்.
புகை பிடிக்கும் மது அருந்தும் இளம் பெண்களுடன் செல்பேசியில் கடலை போடும் காட்சிகளை நிறைய அமைத்து இளைய சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்ல தூண்டும் வகையில் இந்த திரைப்படத்தை எடுத்த இயக்குநரின் முகத்தில் காரி துப்புவதை தவிர வேறு வழியில்லை.
சமூக அழிவுக்கு அழைத்து செல்லும் இதுபோன்ற திரைப்படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு அளிக்கக் கூடாது.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment