தற்கொலைக்கு சமம்....!
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட இருக்கும் டிராபிக் ராமசாமிக்கு திமுக ஆதரவு அளிக்குமா ?
நிச்சயம் அளிக்காது.
எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி அதிமுகவின் கோட்டை.
சென்னையில் திமுக வலுவாக இருந்த காலத்திலேயே ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
தற்போது, அந்த தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை அதிமுக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளது.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் போட்டியிட இருக்கும் டிராபிக் ராமசாமி, இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி.
இப்படிப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவு அளித்து திமுக எப்படி தனது செல்வாக்கிற்கு களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.
திமுகவின் ஆதரவு முழுமையாக கிடைத்தும் டிராபிக் ராமசாமி டெபாசிட் இழந்துவிட்டார் என தேர்தல் முடிவுக்கு பிறகு விமர்சனங்கள் எழும்.
இதனை திமுக ஏற்றுக் கொள்ள நிச்சயம் தயாராக இருக்காது.
மேலும் இன்னும் ஓராண்டிற்குள் சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமக்கு செல்வாக்கு இல்லை என்பதை மக்கள் மத்தியில் திமுகவே செல்ல முன்வருமா.
எனவேதான், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட இருக்கும் டிராபிக் ராமசாமிக்கு திமுக நிச்சயம் ஆதரவு அளிக்காது.
அப்படி ஆதரவு அளித்தால், டிராபிக் ராமசாமி, திமுகவின் ஆள் என அதிமுக பிரச்சாரம் செய்யும்.
இதனால் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்து விட்டு, மறைமுகமாக திமுக தேர்தலை சந்திப்பதாக மக்கள் மத்தியில் அதிமுக பிரச்சாரம் செய்யும்.
இதுபோன்ற பல காரணங்களால் திமுகவிற்கே தர்மசங்கங்கள் ஏற்படும்.
மேலும் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு அளிப்பது தற்கொலைக்கு சமம் என்பது திமுக நன்றாகவே உணர்ந்து இருக்கிறது.
எனவே, டிராபிக் ராமசாமிக்கு நிச்சயம் திமுக ஆதரவு அளிக்காது என்பது என்னுடைய கணிப்பு.
என்ன நான் சொல்வது சரிதானே...!
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்
No comments:
Post a Comment