Monday, June 23, 2025

இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் போர்....!

இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் போர் :  நீதியின் பக்கம் உலக மக்கள்....!

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கி 12வது நாளை எட்டியுள்ளது. தங்களுடைய நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணிகள் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நாடும் அத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் ஈரானும், தங்களுடைய பாதுகாப்பிற்காக எடுக்கும் நடவடிக்கைகளை கண்டு அச்சம் கொண்ட, பீதி அடைந்த இஸ்ரேல், அமெரிக்காவின் துணைவுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஜுன் 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்க, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும், மிகமிக தீவிரமாக இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது. ஈரானின் ஆயுதப் பலத்தை குறைத்து மதிப்பிட்ட இஸ்ரேல், தன்னுடைய ரௌடித்தனம் மூலம் ஈரானை வீழ்த்திவிடலாம் என நினைத்தது. ஆனால், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளே சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள், இஸ்ரேலை புரட்டி போட்டுவிட்டது. வரலாறு காணாத வகையில் இஸ்ரேலில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

ஈரானின் வீரியமான தாக்குதல் காரணமாக, டெல் அவீவ் உள்ளிட்ட நகரங்களை விட்டு யூத மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓட வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டதால், அந்த நகரங்கள் தற்போது காசாவை போன்று மாறிவிட்டன. காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்திய அட்டூழியங்கள் மூலம் அந்த அற்புதமான நகரம் எப்படி சின்னாபின்னமாக மாறிவிட்டதோ, அப்படி இஸ்ரேலிய நகரங்களும் தற்போது மாறிவிட்டன. மிகவும் சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட இஸ்ரேலிய யூதர்கள், தாங்கள் ஆக்கிரமிப்பு செய்து பாலஸ்தீன மண்ணை விட்டு ஓட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இதனால் அச்சம் அடைந்த இஸ்ரேலிய பிரதமர் உலக பயங்கரவாதி பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கெஞ்சி, அமெரிக்காவையும் போரில் இணைத்துவிட்டார். இதன்மூலம், தங்கள் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அமெரிக்க ஈரானை தாக்க தொடங்கிய அன்றே, ஈரான் மீண்டும் ஆக்ரோஷ பலத்துடன் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. மிரட்டும் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

ஈரானின் ஆயுத பலம் :

ஈரானின் ஆயுத பலம் என்பது அந்நாட்டின் இராணுவ வலிமையைக் குறிக்கிறது. இதில் ஏவுகணைகள், போர் விமானங்கள், மற்றும் பிற இராணுவத் தொழில்நுட்பங்கள் அடங்கும். ஈரான் தன் பிராந்திய மற்றும் உலகளாவிய செல்வாக்கை நிலைநிறுத்த இந்த ஆயுத பலத்தைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, பிராந்தியத்தில் உள்ள தனது எதிரிகளுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளவும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் ஈரான் தனது ஆயுத பலத்தை நம்பியுள்ளது.  ஈரான், நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகையான ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. இவை பிராந்தியத்தில் உள்ள இலக்குகளை தாக்க வல்லவை. ஈரானிடம் போர் விமானங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்கள் உள்ளன. இவை வான்வழித் தாக்குதல்களை நடத்தப் பயன்படுகின்றன. ஈரான் தனது ஆயுத பலத்தை தற்காப்புக்காகவும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காகவும் பயன்படுத்துகிறது. ஈரானின் ஆயுத பலம் சர்வதேச அளவில் கவலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான கவலைகள் உள்ளன. 

ஈரான் - ஈராக் போருக்குப் பிறகு, கடந்த 20 ஆண்டுகளில், ஈரான் தனது இராணுவ வலிமையை உலக நாடுகள் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகமிக வலிமைப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளை மிரட்டி, பணிய வைத்தது போன்று ஈரானையும் பணிய வைத்துவிடலாம் என்று எதிர்பார்த்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, தற்போது ஈரான் நடத்திவரும் நவீன ஏவுகணை தாக்குதல்களைக் கண்டு மிரட்டுள்ளன. செய்வது அறியாமல் திகைத்துள்ளன. தங்களுடைய அச்சத்தையும் பயத்தையும் வெளியே தெரிந்துவிடக் கூடாது, இதனால், தங்களுடைய உலக ரௌடி பட்டம் பறிக்கப்பட்டுவிடும்., உலக நாடுகள் இனி தங்களை கண்டு அஞ்சாது என நினைக்கும் அமெரிக்கா, இஸ்ரேல், தற்போது மீண்டும் மீண்டும் உதார்விட்டுக் கொண்டு இருக்கின்றன. தங்களிடம் மிகப்பெரிய ஆயுத பலம் உள்ளதாக கூறிக் கொண்டே இருக்கின்றன. இதனால், ஈரான் மற்றும் அதனை ஆதரிக்கும் நாடுகள் அஞ்சி சரண் அடைந்துவிடும் என்ற ஆசை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இருந்து வருகிறது. இந்த மிரட்டல்களைக் கண்டு கொஞ்சமும் அச்சம் அடையாமல், ஈரானின் வரலாறு தெரியாமல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிரட்டி வருவதாகவும், ஈரான் யாரிடமும் சரண் அடையாது என்றும் எந்தவொரு சவாலையும் மிரட்டிலையும் துணிவுடன் சந்திக்கும் என்றும் ஈரான் உச்சத் தலைவரான அயதுல்லா அலி ஹெசைனி கமெனி உறுதிப்பட தெரிவித்துவிட்டு, இரண்டு பயங்கரவாத நாடுகளை எதிர்த்து பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறார். 

நவீன ஆயுத தொழில்நுட்பங்கள், நவீன ஏவுகணைகள் என அனைத்தும் நவீனமயமாக்கி, ஈரான் தனது இராணுவ பலத்தை வலிமைப்படுத்தியுள்ளது. இந்த நவீன ஆயுதங்கள் எப்படி தயாரிக்கப்பட்டன? என்ற கேள்விகள் தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே எழுந்து அந்த நாடுகள் குழப்பத்தில் இருந்து வருகின்றன. பொருளாதார தடைகள் என பல்வேறு சவால்களை சந்தித்த ஈரான் எப்படி இராணுவ வலிமை பெற்றது ? என்று கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கின்றன. 

உலக மக்கள் யார் பக்கம் ?

இஸ்ரேல் ஈரான் இடையே போர் தொடங்கி 12 நாட்கள் எட்டிவிட்ட நிலையில், உலக மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் ? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால், உலக மக்கள் தற்போது நீதியின் பக்கம் நின்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஈரானின் பக்கம் நிற்கிறார்கள். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரங்களைக் கண்டு வேதனை அடைந்த உலக மக்கள், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியதும், மகிழ்ச்சி அடைந்தனர். உலக ரௌடிகளை அடக்க சரியான வீரியம் மற்றும் துணிச்சல் உள்ள ஒரு நாடு இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்து வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்தால், இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கியது முதல், மக்கள் வெளியிடும் கருத்துகள், மீம்ஸ்கள் ஆகியவற்றின் மூலம், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை உலக மக்கள் வரவேற்றுகொண்டே இருக்கிறார்கள் என்பதை காண முடிகிறது. காசா மக்களை குறிப்பாக, அப்பாவி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகியோர் மீது அநியாயமாக தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல், சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் உலக மக்களின் எண்ணங்களாக இருந்து வருகிறது. தற்போது ஈரான் நடத்திவரும் இந்த தாக்குதல்கள் மேலும் தீவிரம் அடைய வேண்டும் என்பது தான் உலக மக்களில் பெரும்பாலான மக்களின் கருத்தாக இருந்து வருகிறது. 

போர் மிகவும் கொடூரமானது. அதன் பாதிப்புகள் மிகமிக அதிகம். எங்கும் போர் நடக்கக் கூடாது. உலகம் அமையாக இருக்க வேண்டும். போர் இல்லாத உலகம் இருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மக்களின் ஆசை, எண்ணங்களாகும். ஆனால் பாலஸ்தீன காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய இன்னும்நடத்திக் கொண்டு இருக்கிற கொலை தாக்குதல்களை கண்டு, மிகவும் கோபம் அடைந்துள்ள உலக மக்கள், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களை வரவேற்றுக் கொண்டே இருக்கிறார்கள். இஸ்ரேல் காணாமல் போகும் வரை ஈரானின் இந்த தாக்குதல்கள் தொடர வேண்டும் என்பது தான் உலக மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. 

தற்போதைய சூழ்நிலையில், சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், உலக அமைதி விரும்பிகள் அனைவரும் இஸ்ரேல் மீதும், அமெரிக்கா மீதும் மிகமிக கடுப்புடன் இருந்து வருகிறார்கள். உலக மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்பும் இந்த இரு பயங்கரவாத நாடுகள், தங்கள் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பது உலக மக்களின் பார்வையாக இருந்து வருகிறது. அதற்கு தற்போது ஈரான் மூலம் ஒரு புதிய வழி பிறந்து இருக்கிறது. இந்த போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், ஈரான் நடத்திவரும் தாக்குதல்கள் அனைத்தும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் என்றும், தங்களுடைய நாட்டின் இறையாண்மையை  பாதுகாக்க நடக்கும் தாக்குதல்கள் என்றும் உலக மக்கள் உறுதியாக நினைப்பதால், தற்போது ஈரானின் பக்கம், அதாவது நீதியின் பக்கம் உலக மக்கள் நின்றுக் கொண்டு முழு ஆதரவு அளித்து வருகிறார்கள். இதற்கு சாட்சியாக உலகின் பல நாடுகளில் இஸ்ரேல், மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இருந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். அநீதி செய்யும் மனிதன் நிச்சயம் ஒருநாள் வீழ்ச்சி அடைவான். மிகப்பெரிய தோல்வியை அடைவான் என்பது உலக வரலாறு. தற்போது அந்த வரலாறு மீண்டும் எழுதப்பட்டுக் கொண்டு இருக்கிறது. 

கடைசியாக, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கத்தார், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது ஈரான் அதிரடி தாக்குதலை தொடங்கியது. இதனால் போர் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், போர் நிறுத்தப்படவில்லை என்றும், இஸ்ரேலின் அட்டகாசத்தை அழிக்கும் வரை தாங்கள் ஓயபோவதில்லை என்றும் ஈரான் உறுதிப்பட கூறியுள்ளது உலக மக்களை மேலும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்றே கூறலாம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

No comments: