"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"
நாள் - 47
நடிகை பூனம் பாண்டே வேதனை........!!
இந்தி நடிகை பூனம் பாண்டே பெங்களூரில் நடைபெற்ற புத்தாண்டு பார்ட்டி ஒன்றில் நடனம் ஆடினார்
அப்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அவர் மிகவும் வேதனையுடன் கூறினார்.
அவருடைய வேதனையான அனுபவத்தை இப்போது படியுங்கள்....
பெங்களூர் ஓட்டல் ஒன்றில் புத்தாண்டி பார்ட்டில் ஆட கேட்டு கொண்டு நிறைய பணம் கொடுத்தார்கள்.
நான் ஆடத் தொடங்கியதும் ஏராளமான் ஆண்கள் குடிபோதையில் என்னை சுற்றி வட்டமிட்டு ஆடினர்.
ஆட்டம் முடிந்ததும் சிலர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டனர்.
நான் அவர்கள் பிடியில் இருந்து தப்பித்து எனது அறைக்கு திரும்பினேன். இருந்தாலும் சிலர் குடி வெறியில் என்னை விடாமல் துரத்தி வந்தனர்.
நான் தங்கி இருந்த அறைக்கும் துரத்தி வந்தனர். ஓட்டல் நிர்வாகத்தினரால் குடிகாரர்களை கட்டுபடுத்த முடியவில்லை. ஒரு வழியாக அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டேன்.
மற்ற நடிகைகளுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன்.
அதிக பணம் தருகிறார்கள் என்று பாதுகாப்பு இன்றி யாரும் நடனம் ஆட செல்ல வேண்டாம். இவ்வாறு நடிகை பூனம் பாண்டே கூறியுள்ளார்.
மதுப்பிரியர்களால் நடிகை பூனம் பாண்டேக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நமக்கு ஆச்சரியத்தை தவறில்லை.
நடனம் ஆடும் நடிகைக்கு இதுபோன்ற அனுபவம்தான் ஏற்படும்.
ஆனால், மதுவினால் ஒரு மனிதன் எப்படி மிருகமாக மாறுகிறான் என்பது நடிகை பூனம் பாண்டே பெற்ற அனுபவம் மூலம் தெள்ளத் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது.
இதேபோன்று, மற்றொரு நடிகை நித்யா மேனன் என்ன கூறுகிறார் தெரியுமா...
போதையுடன் அமர்ந்திருக்கும் ஆண்கள் மத்தியில் கோடி ரூபாய் கொடுத்தாலும் கவர்ச்சி நடனம் ஆட மாட்டேன் என்கிறார் நித்யா மேனன்.
அதற்கு அவர் கூறும் காரணம், போதையில் இருக்கும் ஆண்களின் பார்வை மிகவும் கொடூரமாக இருக்கும் என்றும், அதன்மூலம் பெண்களுக்கு எந்த பாதுகாப்பு கிடைக்காது என்றும் தெரிவிக்கிறார்.
ஆனால், திரைப்படத்துறையில் இருக்கும் இரண்டு பெண்கள், மதுவினால் ஆண்கள் எப்படி மிருகமாக நடந்துக் கொள்கிறார்கள் என்பதை தங்கள் அனுபவத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்..
மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். அதில் இதுவும் ஒன்று.....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment