ஜி தொலைக்காட்சியில் (G Tv SPV) சம்பள பிரச்சினை வந்தபோது, முதலில் செய்தி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர் குழுவினர்தான் களம் இறங்கி போராடினர்.
இந்த போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது Madras Union of Journalist.
50 ஆண்டுகளாக இயங்கி வரும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தற்போதைய செயலாளர் நண்பர் திரு.மோகன் அவர்கள் ஜி டி.வி. ஊழியர்களுக்கு ஆதரவாக பல்வேறு முயற்சிகளை, நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம், ஜி தொலைக்காட்சி நிர்வாகம் பணிந்தது.
ஊழியர்களுக்கு உடனடியாக மூன்று மாத சம்பளத்தை அளித்தது.
அதன்பிறகு, செய்தி பிரிவைச் சேர்ந்தவர்கள், ஜி தொலைக்காட்சியின் (G Tv SPV) போக்கு பிடிக்காமல் வெவ்வெறு நிறுவனங்களில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர்.
அவர்களில் இன்னும் நிறைய பேருக்கு ஜி தொலைக்காட்சி நிர்வாகம் சம்பள பாக்கி வைத்துள்ளது.
அது ஒருபுறம் இருக்க.. ஜி தொலைக்காட்சியின் சம்பள பிரச்சினை வந்தபோது, முதலில் ஊழியர்களுக்கு ஆதரவாக போராடிய திரு.மோகன் அவர்களுடன், மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளுடன், ஜி தொலைக்காட்சியின் முன்னாள் ஊழியர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வம் கொண்டனர்.
திரு.மோகனுக்கு நாங்கள் ஏற்கனவே நன்றியை தெரிவித்துக் கொண்டாலும், சில சமயங்களில் வரலாறு முக்கியம் என்பதால், புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம், கட்டாயம் ஏற்பட்டது.
நீங்கள் இப்போது பார்ப்பது, அந்த புகைப்படங்கள்தான் இவை....
மற்றொரு புகைப்படம்....
மற்றொரு புகைப்படம்....
நான், தனிப்பட்ட முறையில், திரு.மோகன் அவர்களுக்கு திருக்குர்ஆனின் தமிழ் மொழியாக்கம் மற்றும் மாலைமுரசு முன்னாள் ஆசிரியர் மசூத் அகமது எழுதிய சத்திய முழக்கம் ஆகிய நூல்களை வழங்கி மகிழ்ச்சி அடைந்தேன்.
அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை....
மற்றொரு புகைப்படம்....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment