"மதுவுக்கு எதிரான ஓர் (பிரச்சாரம்) போர்....!"
நாள் - 44
வீட்டில் உள்ளவர்கள் யாரும் மது குடித்தால் மதுவின் தீமையை மாணவர்கள்தான் எடுத்துச்சொல்லவேண்டும்....!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா வேண்டுகோள்....!!
அவசரமான இந்த உலகில். இந்தியாவில் இளைஞர்கள் ஒரு மிகப்பெரிய சொத்தாக உள்ளனர்.
அந்த இளைஞர்கள் நோய் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தால்தான் வருங்கால இந்தியா பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சியை அடையும் என்ற நோக்கத்தில் இளைஞர்களின் ஆரோக்கிய திருவிழா தொடக்கவிழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா விழா மலரை வெளியிட்டார். அதை திட்டக்குழு துணை தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய நீதிபதி கே.என்.பாஷா, லஞ்சம் ஒழியவேண்டும் என்றும், அந்த கருத்து ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வரவேண்டும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியதாக தெரிவித்தார்.
அதுபோல மது என்ற அரக்கனை விரட்டி விடவேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வரவேண்டும் என்றார் நீதிபதி பாஷா.
எனவே மாணவர்களே உங்கள் வீட்டில் தந்தையோ அல்லது அண்ணனோ அல்லது குடும்பத்தில் யாராவது மது அருந்தும் பழக்கம் வைத்திருந்தாலோ அவர்களிடம் நீங்கள் அன்பாக மதுவின் தீமைகளை எடுத்துக்கூறுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அவர்களிடம் கைகூப்பி அன்புடன் வேண்டுகோள் விடுங்கள் என்றும் அவ்வாறு செய்தால் நிச்சயம் பலன்கிடைக்கும் என்றும் அறிவுரை வழங்கினார் நீதிபதி பாஷா.
அதுபோல புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் அதன் தீமையை எடுத்துக்கூறி புகைப்பதை நிறுத்தும்படி சொல்லுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் தீங்கு அல்ல. புகையை பக்கத்தில் இருந்து சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் பாஷா வேதனை தெரிவித்தார்.
புகை பிடிப்பதனால் 40 வினாடிக்கு ஒருவன் இறந்து கொண்டிருக்கிறான் என்றும் ஒருவர் ஒரு சிகரெட் பிடித்தால் அவரது வாழ்நாளில் 5 நிமிடத்தை அவன் இழக்கிறான் என்றும் அவர் கூறினார்.
மது குடித்த உடன் அவனது நிலைமையை மறந்து விடுகிறான். மதுகுடிப்பதால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் நீதிபதி கே.என்.பாஷா தெரிவித்தார்.
நீதிபதி கே.என்.பாஷாவின் மாணவர் சமுதாயம் உள்வாங்கி செயல்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment