"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"
நாள் - 51
என்னுடைய திரைப்படங்களில் டாஸ்மாக் காட்சிகள் இல்லை.....!
தமிழ் திரைப்பட இயக்குநர் விக்ரமன் பெருமிதம்.....!!
புதுவசந்தம், பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தைப்போல உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர் இயக்குநர் விக்ரமன்.
சில வருட இடைவெளிக்குப்பின் அவர் டைரக்டு செய்திருக்கும் புதிய படம், நினைத்தது யாரோ.
இந்த படம் விரைவில் திரைக்கு வருவதையட்டி விக்ரமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், தாம் இயக்குநராக அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்டதாக தெரிவித்தார்.
தன்னுடைய படங்களில் ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இடம்பெறாது என்றார் விக்ரமன்.
இந்த படத்தையும் அதுபோல் குடும்பத்துடன் பார்க்கிற மாதிரி கண்ணியமாக இயக்கி இருப்பதாக கூறிய அவர், குறிப்பாக, டாஸ்மாக் காட்சிகள் படத்தில் வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், யு சான்றிதழ் கொடுத்து இருப்பதாக விக்ரமன் கூறினார்.
நினைத்தது யாரோ படத்தில், புதுமுகங்களை நடிக்க வைத்ததில், தமக்கு எந்த சிரமமும் இல்லை என்றும், இன்னும் சொல்லப்போனால், சவுகரியமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
ரூ.100 கோடி கொடுத்தாலும், இனிமேல் பெரிய நடிகர்கள் பக்கம் போக வேண்டாம் என்று தோன்றுவதாக விக்ரமன் கூறினார்.
தன்னுடைய திரைப்படங்களில் மது குடிக்கும் காட்சிகள், டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் இயக்குநர் விக்ரமனுக்கு ஒரு பாராட்டு....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment