"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!"
நாள் - 53
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தும் வரை ம.தி.மு.க. போராடும்...!வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு......!!
காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் வணிகர் வீதியில் நடந்தது.
கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:–
கடந்த 2010–ம் ஆண்டில் அண்ணா நூற்றாண்டு விழாவினை காஞ்சீபுரத்தில் நடத்தினோம். தற்போது மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வந்துள்ளேன்.
தற்போது மதுவினால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு பாதுகாக்கப்பட மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதேபோன்று மதுவிலக்கு அமல்படுத்தும் வரை ம.தி.மு.க. போராடும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
மதுவிற்கு எதிராக போராடும் ஒருசில கட்சிகளில் ம.தி.மு.க.வும் அடங்கும்.
மதுவிற்கு எதிராக மாநிலம் முழுவதும் பாதை யாத்திரை சென்றவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தும் வரை மதிமுக போராடும் எனறு வைகோ மீண்டும் அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது போராட்டம் வெல்லட்டும்.
தமிழகம் மது இல்லாத மாநிலமாக மாறட்டும்....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================
No comments:
Post a Comment